பகல் தூக்கம் நல்லதா?

பகல் தூக்கம் என்றவுடன் ஏதோ கும்பகோணம் தூக்கம் போல எண்ணி விட வேண்டாம். ஆங்கிலத்தில் NAP என்று கூறப்படும் இது பகலில் சிறிது நேரம் கண்ணயர்வது அதாவதுகுத் குட்டித் தூக்கம் என்பதாகும். இந்த பகல் தூக்கம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த மருந்து. இதனை சிறுதுயில் என்றும் கூறலாம்.

உலகில் பல படைப்பாளிகள், அறிஞர்கள், வீரர்கள், திறமைசாலிகள் பகலில் குட்டித் தூக்கம் தூங்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.

நெப்போலியன் போனபார்ட் – பகல் தூக்க விரும்பி.. இவருடைய பெயரில் இருந்துதான் பகல் தூக்கம், சிறுதுயில் முதலியவற்றிற்கு அவரது பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை NAP என்று சூட்டினார்கள். குட்டித் தூக்கம் என்பது சோம்பலின் அறிகுறி அல்ல; ஆரோக்கியத்தை புதுப்பித்துத் தரும் அருமருந்து.

மேதைகள் தினமும் பகலில் ஒரு 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை தூங்கியதாக சரித்திரம் கூறுகிறது. அதிலும் அரசியல் தலைவர்கள் தங்களது மிகவும் முக்கியமான பணிகளுக்கு முன் ஒரு இருபது நிமிடம் நாற்காலியில் சாய்ந்தபடி தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

பகல் தூக்கம் நல்லதா?

பகலில் சிறுதூக்கம் தூங்குவதால் உடலுக்கு அது பல வகைகளில் நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. மனதிற்கும், உடல் உறுப்புகளுக்கும் அதிக ஆற்றலை அளிக்கக் கூடியதாக உள்ளது. அதுவே பகலில் அதிக நேரம் தூங்கினால் அது பல உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

பகல் தூக்கத்தின் பயன்கள்

  • குட்டித் தூக்கம் என்றால் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பகல் நேரத்தில் தூங்குவது. இதைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால் இதய நோய் முற்றிலும் தவிர்க்கலாம்.
  • நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்கிறது.
  • பகல் தூக்கம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய ஒரு அற்புதமான விஷயம்.
  • சிறுதுயில் என்பது நமது நினைவாற்றலை அதிகரிக்க உதவும். நம்முடைய வேலைகளில் திறனை அதிகரித்து, மனநிலையில் நல்ல ஒரு உற்சாகமும் ஏற்படுத்துவது.
  • மன உளைச்சலில்லிருந்து வெளியேற உதவும்.
  • நமது எண்ண ஓட்டங்களில் இருக்கக்கூடிய தகவல்களை எளிதாக ஒருங்கிணைக்கவும், சிக்கல்களை எளிதாக களையும் ஆற்றலையும் இந்த பகல் தூக்கம் நமக்கு எளிதில் அளிக்கும்.
  • உடலின் உற்சாகத்தை அதிகரிக்கும்.
  • பலர் பகலில் காபி, தேனீர் அருந்தும் பழக்கத்தை கொண்டிருப்பார். அதைவிட மிகச்சிறந்த ஆற்றலையும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஒரு சிறந்த பழக்கம் இந்த குட்டித் தூக்கம்.
  • ஒரு 20 நிமிடம் உணவுக்கு பின் லேசான ஒரு உறக்கம் உடலுக்கு தேநீரும் காபியும் கொடுக்காத தெம்பையும், உற்சாகத்தையும் அளிப்பதுடன் நினைவாற்றலை அதிகரித்து நமது விழிப்புணர்வையும் அதிகரிக்க கூடியதாகவும் இருக்கும்.
  • விடிகாலை தொடங்கி இரவு வரை தொடரும் பணிகளுக்கு ஒரு சிறந்த இடைவெளி என்பது சிறு துயில். நீண்ட பகல் பொழுதுக்கு ஒரு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
  • அதிகமான சோர்வு, மன உளைச்சல், கவலை போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்து இந்த சிறு துயில்.
  • மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும் போக்கும் இந்த மிகச்சிறந்த சிறுதுயில் இருதயத்தில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் உள்ளது. ரத்த அழுத்தம், இரத்தக் குழாய் அடைப்புகளை குறைக்கவும் உதவும் கூடியதாக உள்ளது.
  • பகலில் சிறுதுயில் மேற்கொள்ள எளிதில் பல பிரச்சணைகளை சமாளிக்க முடியும்.

சிறுதுயிலுக்கான நேரம்

சிறுதுயில், குட்டித் தூக்கம் என்பது மதிய உணவிற்குப் பின் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் கண்ணயர்வது.

பல ஆய்வுகள் மதிய உணவுக்கு பின் ஒரு மணி முதல் மூன்று மணிக்குள் ஒரு 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் சிறு தூக்கம் உடலுக்கு பலவகையில் நன்மை பயக்கக் கூடியதாக உள்ளது என வெளியிட்டு உள்ளது. அதிலும் இந்த தூக்கத்திற்கு பின் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய இரவு தூக்கம் சீராக இருக்கும் என்றும் வெளியிட்டுள்ளது.

இவ்வளவு பயன்களையும் நன்மைகளையும் கொண்டது சிறுதூக்கம். காலையில் சூரிய உதயத்திற்கு முன் துயிலெழுந்து மதிய உணவிற்குப்பின் சிறிது நேரம் கண்ணயர்ந்து பணிகளை செய்ய இரவு சுகமான தூக்கத்தை பத்துமணிக்கே பெறலாம். தூக்கமின்மை என்ற வார்த்தைக்கே இரவு இடமில்லாத வகையில் உடலும் மனமும் எந்நேரமும் புத்துணர்வுடன் இருக்கும். மேலும் உடல் ஆரோக்கியமும் எதிர்பார்க்காத மாற்றங்களை அளிக்கும். எனவே உங்கள் வேலை சூழ்நிலைக்கேற்ப 15 நிமிடங்கள் பகலில் தூங்க முயற்சி செய்வது சிறந்தது.