Synedrella nodiflora; முடியன் பச்சை
முடியன் பச்சை மூலிகை சாதாரணமாக எல்லா இடங்களிலும் காணக்கூடிய ஒரு களைசெடி. எளிதாக படர்ந்து பரவக்கூடிய மூலிகை. இலைகள் எதிரெதிர் அடுக்கில் ஜோடிகளாக இருக்கக் கூடியது. இலைகள் நீள்வட்டத்திலிருந்து முட்டை வடிவதில் இருக்கக் கூடியது. ஈரப்பதம் அதிகமிருக்க அடித்தண்டு பகுதிகள் கூட வேர்களை விடத்தொடங்கும். வலுவாக கிளைத்திருக்கும் இந்த செடியின் வேர்கள் ஆழமற்ற வேர் அமைப்பைக் கொண்டது. மேற்பகுதியில் சிறு சிறு மஞ்சள் நிற பூக்களை காணலாம். இதன் இலைகள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.
முடியன் பச்சை மூலிகை பயன்கள்
கீழ்காணும் நோய்களுக்கு சிறந்தது.
- இதயக் கோளாறு
- வலிப்பு நோய்க்கு மிக சிறந்த மருந்து. உலகளவில் பல நாடுகளில் இதனை வலிப்பு நோய்க்கு நாட்டு மருத்துவத்தில் இதனை மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
- தோல் நோய்
- இரத்தப் போக்கை நிறுத்த சிறந்த செடி.
- நரம்பியல் கோளாறுகள்
- காயங்களை ஆற்றக்கூடியது
- தலைவலி
- காதுவலி
- வயிற்றுவலி
- ஈறுகளில் ஏற்படும் தொந்தரவுகள்
- வீக்கங்களை குறைக்கக் கூடியது
- உடல் வலியை போக்கும்
- வாத நோய்
- எலும்புகளுக்கு பலமளிக்கும்.
- விக்கலை எளிதாக தடுக்கும்.
நுனி இலைகள் அடி இலையை விட சிறிதாக இருக்கும். வாத நோய்க்கு இதன் இலைகளை பல நாடுகளில் மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்துகின்றனர். வலிப்பு நோய்க்கு இந்த சமூலத்தை நீரில் கொதிக்கவைத்து பல நாடுகளில் பருகுகின்றனர். கர்பிணிகள் இதனை பயன்படுத்தக் கூடாது. சிறந்த ஒரு மலமிளக்கியாகவும் இதன் கொழுந்து இலைகள் உள்ளது.
இந்த இலை சாறினைக் கொண்டு வாய் கொப்பளிக்க பற்களின் ஈறுகளில் ஏற்படும் வலி, வீக்கம், இரத்தக்கசிவு நீங்கும். முடியன் பச்சை மூலிகை சாறைக் கொண்டு கால்களை அன்றாடன் மசாஜ் செய்ய எலும்பு முறிவு, எலும்பு விலகல் சீராகவும். மூல நோய் மற்றும் வயிற்றுப்போக்குக்கு இதன் கசாயம் பயன்படும்.
கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக உள்ளது. விவசாய நிலங்களில் இதனை பயிரிடுவதால் செடிகள், பயிர்களை தாக்கும் பூச்சிகளை இந்த மஞ்சள் நிற சிறு பூக்களைக் கொண்ட முடியன் பச்சை மூலிகை ஈர்க்கும். பூச்சிகளை ஈர்க்கும் செடி. இதனால் நமது பயிர்கள் பூச்சிகளில் இருந்து பாதுகாக்கப்படும்.