பாரம்பரிய அரிசி ஆத்தூர் கிச்சிடி சம்பா அரிசி இனிப்பு பொங்கல்
புது அரிசி ஆத்தூர் கிச்சடி சம்பா பாரம்பரிய அரிசி சர்க்கரைப் பொங்கலுக்கு சிறந்த அரிசி. மேலும் கிச்சிலி சம்பா அரிசியைப் பற்றி பல சுவாரசியமான பல தகவல்களை தெரிந்து கொள்ள – கிச்சிலி சம்பா
கிச்சிலி சம்பா அரிசியை சமைக்கும் முறையினையும் இந்த இணைப்பிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம் – கிச்சிலி சம்பா அரிசி சாதம் சமைக்கும் முறை.
குறைவில்லாத சத்துக்களும், நிறைவான சுவையையும் அளிக்கும் சிறந்த அரிசி நம் பாரம்பரிய அரிசி ஆத்தூர் கிச்சடி. இதனில் பொங்கல் வைக்க மணமும் சுவையும் அபாரமாக இருக்கும். For English Pongal Recipe.
தேவையான பொருட்கள்
- 2 கப் ஆத்தூர் கிச்சடி பச்சை அரிசி
- 3/4 கப் பாசிப்பருப்பு
- 1 அல்லது 2 கப் பசும்பால்
- 3 கப் வெல்லம்
- 15 முந்திரிப் பருப்பு
- 2 ஸ்பூன் திராட்சை
- சிறிதளவு ஜாதிக்காய்
- சிறிதளவு பச்சை கற்பூரம்
- ½ மூடி தேங்காய் துருவல்
- 5 ஏலக்காய் (பொடித்துக் கொள்ளவும்)
- ½ கப் பசு நெய்
செய்முறை
- முதலில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.
- ஒரு புது மண் பானை அல்லது வெண்கலப் பானையில் முதலில் அரிசி மாவைக் கொண்டு கோலமிட்டு அதனில் சிறிது அரிசி மாவு சேர்த்து ஒன்று அல்லது இரண்டு கப் பாலுடன் மீதம் நீர் சேர்த்து மொத்தமாக 7 கப் என்ற விகிதத்தில் கொதிக்கவிடவும்.
- நன்கு கொதி வந்தவுடன் களைந்த புது அரிசி ஆத்தூர் கிச்சிடியையும் பாசிப்பருப்பையும் சேர்த்து அவ்வப்பொழுது கிளறிவிடவும்.
- தண்ணீர் சுண்டி நன்கு குழைய வெந்தபின் வெல்லத்தைப் பொடித்து சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து அடி பிடிக்காமல் கிளறி விட வேண்டும். சிறிது நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- மீதமிருக்கும் நெய்யில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
- நன்கு வெந்து பொங்கல் பக்குவத்திற்கு வந்தபின் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துருவலை சேர்த்து பொரித்து பொடித்த ஜாதிக்காய், ஏலக்காய் தூள், பச்சை கற்பூரம் சேர்த்து மீதமிருக்கும் நெய்யையும் சேர்த்து கலந்து விட சுவையான பாரம்பரிய ஆத்தூர் கிச்சடி அரிசி சர்க்கரை பொங்கல் தயார்.