வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான சத்தான லட்டு. சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு அதனுடன் மாப்பிள்ளை சம்பா அரிசி, கவுணி அரிசி சேர்த்து தயாரித்த சுவையான லட்டு. மாலை சிற்றுண்டியாகவும், வேலைக்கு செல்பவர்களுக்கு எடுத்துச் செல்ல ஏதுவாகவும் இருக்கும் சத்தான லட்டு.
தேவையான பொருட்கள்
- ¼ கப் முளைக்கட்டிய கம்பு மாவு
- ¼ கப் முளைக்கட்டிய கேழ்வரகு மாவு
- ¼ கப் மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு
- ¼ கப் கருப்பு கவுனி அரிசி மாவு
- ¼ கப் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை, பேரிச்சை, திராச்சை
- ½ கப் பசு நெய்
- ¾ கப் நாட்டு சர்க்கரை
செய்முறை
- மாப்பிள்ளை சம்பா அரிசி, கவுனி அரிசியை மாவாக நன்கு அரைத்துக்கொள்ளவும், பின் எல்லா மாவையும் வெறும் வாணலியில் சிறு தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும்.
- அதன் பின் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை, பேரிச்சை, திராச்சை கலவையை லேசாக வாசனை வரும் வரை பசு நெய்யில் வறுக்கவும்.
- இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே பொடித்த நாட்டு சர்க்கரையை கலந்து நெய்யை உருக்கி ஊற்றி சுடச் சுட சிறு உருண்டைகளாகப் பிடித்துக் எடுக்க வேண்டும்.
- சத்தானதும் சுவையானதுமான இந்த ஹெல்த்தி லட்டு அனைவருக்கும் ஏற்றது.
ஹெல்த்தி லட்டு / Healthy Laddu
வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான சத்தான லட்டு. சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு அதனுடன் மாப்பிள்ளை சம்பா அரிசி, கவுணி அரிசி சேர்த்து தயாரித்த சுவையான லட்டு. மாலை சிற்றுண்டியாகவும், வேலைக்கு செல்பவர்களுக்கு எடுத்துச் செல்ல ஏதுவாகவும் இருக்கும் சத்தான லட்டு.
பரிமாறும் அளவு : – 3