சொர்ணமசூரி அரிசி – நம் பாரம்பரிய அரிசி

தமிழகத்தில் அதிகமாக பயிரிடப்படும் ஒரு பாரம்பரிய அரிசி வகை இந்த சொர்ணமசூரி அரிசி. பலருக்கும் விருப்பமான அரிசி என்று கூட இதனை சொல்லலாம். காரணம் இதனுடைய மணம், தன்மை மற்றும் இதனுடைய நிறமும். வெள்ளை நிற அரிசியான இந்த சொர்ணமசூரி அரிசி மதிய உணவிற்கு ஏற்ற, பலருக்கும் விருப்பமான ஒரு சிறந்த பாரம்பரிய ரகம்.

தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் பயிரிடப்படும் அரிசி வகை இந்த சொர்ணமசூரி பாரம்பரிய அரிசி. ‘சொர்ணம்’ என்றால் தங்கம் என்று பொருள். தங்கம் போல ஜொலிக்க கூடிய நெல்லைக் கொண்டது என்பதால் இதற்கு சொர்ண மசூரி என்ற பெயர் காரணத்தை பெற்றது.

நான்கு மாதத்தில் அறுவடைக்கு தயாராக கூடிய ரகம். இந்த சொர்ணமசூரி அரிசியை ஒற்றை நாற்று நடவு மூலம் பயிரிட நல்ல ஒரு விளைச்சலையும் மகசூலையும் பெற முடியும். பாசன வசதி சீராக இருக்க நல்ல விளைச்சலை பெறலாம். எந்தவிதமான இரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் இல்லாமல் இயற்கையான முறையிலேயே விளையக்கூடிய ஒரு அரிசி ரகம்.

இயற்கையான முறையில் ‘ஆர்கானிக் அரிசி’ யாக இந்த சொர்ணா மசூரி அரிசியை விளைவிக்கும் பொழுது நல்ல ஒரு மகசூலையும் பெற முடியும். இயற்கையாகவே இந்த நெல் பயிரில் சுணை அமைந்துள்ளதால் பூச்சிகளின் தாக்கம் முற்றிலும் இல்லாமல் இதனை எளிமையாக பராமரித்து வளர்க்கக் கூடியதாக தன்மை கொண்டதாகவும் உள்ளது.

இந்த சொர்ணமசூரி அரிசியின் மற்றொரு சிறப்பு இதனுடைய கணிசம். குறைந்த அரிசியே வெந்தபின் நல்ல ஒரு கணிசத்தை அளிக்கக் கூடியது. அதனால் குறைந்த அளவு அரிசியை பயன்படுத்தினாலே போதும், நிறைவான உணவாக அது அளிக்கும். இந்த அரிசி சாதம் நல்ல சுவையாக இருக்கும். இந்த அரிசியின் சாதம் வெள்ளை நிறத்தில் இருக்க கூடியது.

பிரியாணிக்கு சிறந்த ஒரு அரிசி. சீரகசம்பா அரிசிக்கு அடுத்தபடியாக பலருக்கும் விருப்பமான இந்த சொர்ணமசூரி அரிசியை பிரியாணிக்கும் அதிகம் பயன்படுத்துவதுண்டு. சொர்ணா மசூரி அரிசியில் தயாரிக்கக்கூடிய பிரியாணி நல்ல ஒரு சுவையாகவும் நல்ல மணமாகவும் இருக்கும்.

உடல் பருமனை குறைக்க

குறைந்த கலோரியை கொண்ட இந்த அரிசி உடல் பருமனில் உள்ளவர்களுக்கு ஏற்றது. உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்கக் கூடிய அரிசி. அதிகம் பட்டை தீட்டாத அரிசியை அல்லது புழுங்கல் அரிசியை பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.

நீரிழிவு

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது. உடலில் இருக்கும் செல்களுக்கு புத்துணர்வை அளிக்கும் அரிசி. நீரிழிவிற்கு ஏற்ற அரிசி. ஹார்மோன் பதிப்புகளையும் குறைக்கும் தன்மை கொண்டது.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் உதவும் அற்புதமான அரிசி இந்த சொர்ணா மசூரி அரிசி. தொடர்ந்து உணவில் இந்த பாரம்பரிய அரிசியை பயன்படுத்துவதால் விரைவில் நம் உடல் தங்கம் போல் ஜொலிப்பதை நாம் பார்க்கமுடியும். உடலில் இருக்கும் நோய்களையும், பித்தத்தால் வரக்கூடிய தொந்தரவுகளையும் நீங்கி உடலும் பலத்தை அளிக்கும் தன்மைக் கொண்டது.

ஜீரண சக்தியை அதிகரிக்க

ஜீரண மண்டலத்தில் வரக்கூடிய பாதிப்புகள், அஜீரணம், மலச்சிக்கல், வாய்வு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு அரிசி இந்த சொர்ணா மசூரி. இந்த அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல உடல் ஆற்றலை பெறமுடியும். குழந்தைகளுக்கும் ஏற்ற ஒரு சிறந்த பாரம்பரிய அரிசி.

சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கக் கூடிய இந்த சொர்ண மசூரி அரிசியை மிக எளிமையாக சமைக்கலாம். அன்றாடம் மதிய உணவிற்கு இந்த அரிசியைக் கொண்டு சோறு தயாரிப்பதும் மிக சுலபமானது. கழுவி அரைமணி நேரம் இந்த அரிசியை ஊறவைத்து வடித்து உண்பது நல்ல பலனை அளிக்கும்.

சொர்ணா மசூரி அரிசி பழைய சாதத்திற்கும், கஞ்சிக்கும் கூட உகந்தது. இந்த அரசியல் தயாரிக்கக்கூடிய பழைய சாதம் நல்ல ஒரு மணமாகும் நல்ல ஒரு சுவையாகவும் இருக்கும். மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் சுவை மாறாமல் அதிக சத்துக்களைக் கொடுக்க கூடியதாகவும் இருக்கும். இந்த பழைய சாதத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமாக உள்ளது.

கஞ்சிக்கும் ஏற்ற ஒரு அரிசியாக இருக்கும் சொர்ணமசூரி அரிசியை கஞ்சி செய்ய பருக உடல் வலிமைப் பெரும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் சிறந்த ஒரு உணவாக இது இருக்கும். எளிமையாக செரிமானமாகக் கூடிய தன்மை கொண்ட அற்புதமான பாரம்பரிய அரிசி ரகம் இந்த சொர்ணமசூரி அரிசி.

(6 votes)