சூரிய நமஸ்காரம்

காலையில் கதிரவன் உதிக்கும் நேரம் இயற்கையின் சூட்சமத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கதிரவனை வணங்கி அந்த நாள் பொழுதை தொடங்கும் மரபு காலம்காலமாக நம் மண்ணில் உள்ளது. அதிகாலை நேரத்தில் எழுந்து சூரிய ஒளியில் இருக்க எந்த நோய் நொடியும் ஏற்படாது என்பதையும் மன தெளிவு, சிந்தனைத் தெளிவு இருக்கும் என்பதையும் புரிந்த நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் என்ற ஒரு யோகா முறையைக் கையாண்டு அதனை பின்பற்ற சிறப்பாக வாழ்ந்தனர்.

இன்றும் இந்த மரபு பல இடங்களில் தொடர்கிறது. சூரியனை வணங்குவதில் சில பயிற்சி முறையையும், வழி முறைகளையும் பின்பற்றினர். சூரிய நமஸ்காரம் செய்ய மொத்தம் பன்னிரண்டு படிகள் உள்ளது. இதனை ஒரு சுற்றாக செய்யவேண்டும். முதல் பாதி ஒரு பக்கமும் மீண்டும் மறு பாதி மறுபக்கமும் என செய்யவேண்டும்.

சூரிய நமஸ்காரம் செய்ய இடுப்பு வலி, உடல் வலி, மூட்டு வலி, ஹார்மோன் தொந்தரவுகள், உடல் பருமன் உள்ளுறுப்பு தொந்தரவுகள், இரத்தம் சுத்தமாக்குதல் என பல தொந்தரவுகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

முதல் நிலை
பிரணாமாசனா (வணங்கும் தோற்றம்)

நேராக நின்று இரு கைகளையும் கூப்பி சூரியனைப் பார்த்து வணங்கும் நிலை.

இரண்டாவது நிலை
ஹஸ்தஉட்டனாசனா (கைகள் உயர்த்திய தோற்றம்)

முதல் நிலையில் வணங்கிய கைகளை அவ்வாறே மேல் நோக்கி உயர்த்துவது.

மூன்றாம் நிலை
ஹஸ்தபடாசனா ( கை முதல் பாதம் வரையில் தோற்றம்)


இரண்டாம் நிலையிலிருந்து கைகளை உட்பக்கம் வளைத்து பாதங்களை தொடுவது.

நான்காம் நிலை
அஸ்வ சஞ்சலனாசனா (குதிரைச் சவாரித் தோற்றம்)

மூன்றாம் நிலையிலிருந்து வலது காலை பின்பக்கம் முடிந்தவரை நீட்டுவது.

ஐந்தாம் நிலை
தண்டாசனா ( குச்சி தோற்றம்)

நான்காவது நிலையிலிருந்து வலது காலையும் பின்னோக்கி வைத்து உடல் முழுவதும் நேர்கோட்டில் தலையை தூக்கி வைப்பது.

ஆறாவது நிலை
அஷ்டாங்க நமஸ்காரா

தலையை கீழ் இறக்கி மார்பு, முகவாய் மற்றும் கால் முட்டியை தரையில் படுமாறு வைத்து இடுப்பை தூக்கியவாறு செய்யவேண்டும்.

ஏழாவது நிலை
புஜங்காசனா (பாம்புத் தோற்றம்)

தலை மற்றும் மார்பினை சற்று மேல் உயர்த்தி செய்வது.

எட்டாவது நிலை
பர்வதாசனா ( மலைத் தோற்றம்)

இடுப்பு மற்றும் முதுகு பகுதியை மலைப்போல் உயர்த்தி, தலையை கீழாக வைக்கவேண்டும்.

ஒன்பதாவது நிலை
அஸ்வ சஞ்சலனாசனா (குதிரைச் சவாரித் தோற்றம்)

ஒருகாலை நீட்டி கைகளைக் கொண்டு உயர்த்தி தலையை தூக்கியவாறு செய்வது.

பத்தாவது நிலை
ஹஸ்தபடாசனா ( கை முதல் பாதம் வரையில் தோற்றம்)

கால்களை முன்பக்கம் எடுத்துவந்து கைகளை தரையில் தொட்டவாறு மூட்டுகள் வளையாமல் நிற்பது.

பதினோராவது நிலை
ஹஸ்தஉட்டனாசனா (கைகள் உயர்த்திய தோற்றம்)

கைகளை உயர்த்தி இரண்டாவது நிலையைப் போல் செய்வது.

பண்ணிரண்டவது நிலை


முதல் நிலையைப் போல் கைகளை இணைத்து நமஸ்காரம் செய்வது.

(2 votes)