பொதுவாக சுண்ணாம்பு என்றவுடன் நம் எல்லோருக்குமே நினைவுக்கு வருவது தாம்பூலத்தில் வைக்க கூடிய சுண்ணாம்பு, மற்றொன்று வீடுகளுக்கு வெள்ளை அடிக்க பயன்படக்கூடிய சுண்ணாம்பு. இவை மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய மிக முக்கியமான இடத்தில் இந்த சுண்ணாம்பு உள்ளது. சுண்ணாம்பு ஒரு சிறந்த ஆன்டி-செப்டிக் தன்மை கொண்டது, வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது, மூச்சு திணறல், அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு மருந்தாக உள்ளது.
மன அழுத்தம் உள்ளவர்களுக்கு அவசியமான ஒரு பொருளும் இந்த சுண்ணாம்பு. உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு சுண்ணாம்பு பெரிய அளவில் உதவக் கூடியதாகவும் உள்ளது. வாந்தியை நிறுத்தவும், வயிற்றுவலியைக் குறைக்கவும், கீல்வாதம் போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல ஒரு மருந்தாக இந்த சுண்ணாம்பு உள்ளது.
சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு ஒன்று கல் சுண்ணாம்பு மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இரண்டுமே மருத்துவ பயன் உள்ளது.
வீட்டு சுவர்களில் சுண்ணாம்பை அடிப்பதால் பூச்சிகள் ஒழியும், புறஊதாக் கதிர்களின் தாக்கம் ஏற்படாது.
விஷக்கடிகளுக்கு
நாய், பூனை, பூரான், எலி, பெருச்சாளி, மூஞ்சுறு கடித்துவிட்டால் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம் மூன்றையும் சம எடை எடுத்து தண்ணீர் விட்டு மைபோல் அரைத்துக் கடிவாயில் வைத்து சூடேற தேய்த்துவர நஞ்சு நீங்கும்.
தேள் கடி
தேள் கடிக்கு சுண்ணாம்புடன் கொஞ்சம் நவச்சாரம் சேர்த்து நசுக்கி அதை கொட்டின இடத்தில் வைத்து தேய்த்தால் நஞ்சு இறங்கும்.
கடுமையான தொண்டை கட்டுக்கு
படுக்கும் முன் சம அளவு தேனும், சுண்ணாம்பும் கலக்கவும். சூடாகும் இந்தப் பசையைத் தொண்டையில் பூசினால் பிடித்துக்கொள்ளும். காலை தொண்டை தெளிவாகும்.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலைக்கு கால் படி தயிருடன் கொட்டைப்பாக்களவு சுண்ணாம்பு சேர்த்து மூன்று நாள் காலையில் மட்டும் சாப்பிட்டால் குணமாகும்.
வெந்நீர் அல்லது நெருப்பு பட்ட புண்ணுக்கு
சுண்ணாம்பை போல் இரு பங்கு நீரில் சுண்ணாம்பை கலக்கவும். மேலே தெளிந்த நீரை மட்டும் எடுத்து தேங்காய் எண்ணெயைக் கலந்து குழப்பி தடவி வர புண் ஆறும்.
கட்டிகள் பழுத்து உடைய
சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம எடை எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து போட்டு வரக் கட்டி பழுத்து உடையும்.
வீக்கம் இரத்தக்கட்டுக்கு
சுண்ணாம்பு, துணி சுட்ட கரி, பனை வெல்லம் இவற்றைச் சம எடை எடுத்து மைபோல் அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் போட குணம் தெரியும்.
சிறுநீர் இறங்காவிட்டால்
சுண்ணாம்பை உமிழ் நீர் விட்டுக் குழைத்து அதைத் தொப்புளைச் சுற்றி தடவி விட்டு கால் பெருவிரல் நரம்பிலும் தடவிக் கால் விரலை நன்கு தேய்த்து விட நீர் எளிதாக இறங்கும்.