சுண்டைக்காய் வற்றல்

சளியை அகற்றும் சுண்டைக்காய் வற்றல்

தமிழகத்தில் சாதாரணமாக பெரும்பாலனவர்கள் வீடுகளிலும் கிராமப்புறங்களில் ஆங்கங்கே காணப்படும் செடிகளில் ஒன்று சுண்டைக்காய்.

சுண்டைக்காயை பற்றி அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள். சுண்டை வற்றல் குழம்பு நாவிற்கு ருசியும் உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடிய நல்லதொரு மருந்தாகவும் பயன்படுகிறது. எளிதாகவும் விலை மலிவாகவும் கிடைக்க கூடியது. அதனால் சாதாரண மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை யாரும் இதனை நினைத்த நேரத்தில் வாங்கி பயன்படுத்த முடியும்.

சுண்டைக்காயை அப்படியே காய வைத்து வற்றலாக்குவதை விட மோரில் ஊறப் போட்டு உலர்த்தி எடுக்க வேண்டும்.

சற்று உலர்ந்த பின் மறுபடியும் மோரில் ஊற வைத்து உலர்த்த வேண்டும். இவ்வாறு குறைந்தது மூன்று தடவையாவது செய்வது நல்லது. சுண்டைக்காய் வற்றலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினரும் அளவு கட்டுப்பாடின்றி உபயோகிக்கலாம்.

நெய் அல்லது நல்லெண்ணையில் மோரில் ஊறவைத்த சுண்டைக்காய் வற்றலை வறுத்து இரவு சாப்பாட்டின் போது உபயோகிப்பது சிறந்ததாகும். சுண்டைக்காயைத் தொடர்ந்து எந்த உருவத்தில் சாப்பிட்டு வந்தாலும் காசநோய் ஆஸ்துமா, மார்பு சளி ஆகியவை குணமாகும்.

(16 votes)