சூரிய ஒளி – சூரியக் குளியல்

உலகில் உள்ள அனைத்து உயிரினத்திற்கும் ஆதாரமாக விளங்குவது சூரியன். சூரிய ஒளியே உயிர்களின் எதார்த்த நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளது. சூரிய மருத்துவம் என்பது சூரியக் குளியலால் நிகழ்த்தப்படும் ஒருவகை மருத்துவ முறையாகும். இதனால் உடலில் ஏற்படும் பெரும்பான்மையான நோய்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சூரிய ஒளி சீராக உடலில் பட இன்று பெரும்பாலும் பெண்களுக்கு வரும் பல நோய்களும் மறையும் என்றால் அதை மறுக்க முடியாது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்குமான சிறந்த எளிய சிகிச்சை முறையும் இதுவே. எந்த செலவும் இல்லாமல் இயற்கையின் கொடையால் உடல் ஆரோக்கியத்தைப் பெற எளிய முறையும் இதுவே.

சூரியக் குளியல் செய்ய ஏற்ற நேரம் எது?

சூரிய மருத்துவம் செய்ய விடியற்காலை செவ்விள ஞாயிறே ஏற்றது. விடியற்காலை என்பது சூரிய உதய நேரமும் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பும். மேலும் காலை ஏழு-எட்டு மணிக்குள்ளாக இருப்பது சிறந்தது. காலை 9 மணிக்கு மேல் சூரிய மருத்துவம் செய்ய ஏற்றதல்ல.

எவ்வாறு சூரிய குளியல் மேற்கொள்ள வேண்டும்

உள்ளாடைகளுடன் மட்டும் உடலின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் வெய்யில் படும்படி சூரிய ஒளியில் இருக்க வேண்டும். அமர்ந்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் 5 நிமிடத்தில் தொடங்கிப் படிப்படியாக ஒரு மணி நேரம் வரை படிப்படியாக நேரத்தை அதிகரித்து சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.

சூரிய ஒளியில் என்ன சத்துக்கள் உள்ளது?

விடியற்காலை சூரியனின் சாய்ந்த ஒளிக்கதிரில் புறஊதா கதிர்கள் உண்டு. இவை உடலுக்குச் சக்தி தருபவை. வைட்டமின் டி (D) இதில் நிறைய உண்டு. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

வைட்டமின் டி

வைட்டமின் டி பற்றாக்குறையால், குழந்தைகளுக்கு, பெரியவர்கள், வயதானவர்கள், பெண்களுக்கு வரும் ரிக்கெட்ஸ், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டு வலி, எலும்பு தேய்மானம், கை கால் வீக்கம் வலி ஆகியவை சூரியக் குளியல் செய்ய நீங்கும். சூரிய ஒளியின் இரசாயனக் கதிர்கள், இரத்தச் சிவப்பு அணுக்களின் உற்பத்தியைப் பெருக்குகின்றன. சோகை நோய்க்கு இது மாமருந்து.

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு

கருவுற்றிருக்கும் பெண்கள் அன்றாடம் தவறாமல் சூரியக் குளியல் செய்ய தாயின் ஆரோக்கியம், குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு பலமளிக்கும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு

பச்சிளம் குழந்தைகளை விடியற் காலை வெயிலில் சிறிது நேரம் வைக்க மஞ்சள் காமாலை உட்பட கல்லீரல் நோய்கள் தாக்காமல் பாதுகாக்கலாம்.

தலை முடி

தலை முடி உதிர்வதை தடுக்க இது சிறந்த மருத்துவம். சூரியக் குளியல் செய்ய முடி செழித்து வளரக் கதிரொளி உதவும்.

சருமத்திற்கு

சூரியக் கதிரொளி தோலின் வேலையைச் செம்மையாக்குகிறது. தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது, நோய்க்கிருமிகளை அழிக்கிறது. தோல் நோய்த் தொல்லைகள் தொலைய சூரிய மருத்துவம் உதவும்.

கண்களுக்கு

எல்லாவித கண் கோளாறுகளுக்கும், கண்ணை மூடிக்கொண்டு சூரியனை நோக்கலாம். விழியை, பக்க வாட்டிலும்., மேலும் கீழும் நகர்த்தலாம்.

மேலும் சூரியக் குளியலால் ஏற்படும் சில நன்மைகள்

மன உளைச்சல் நீங்கும், தூக்கமின்மையை விரட்டும், உடலின் ஹார்மோன் சுரப்பை சீராக்கும், செரிமான மண்டலத்தை பலப்படுத்தும், எலும்புகளை உறுதியாக்கும் என ஒட்டுமொத்த உடல் பலத்தையும் அதிகரிக்கும்.

யார் செய்யக் கூடாது

சூரியக்குளியலின் போது மயக்கம் ஏற்படுபவர்கள், நரம்பு வியாதி உள்ளவர்கள், இரத்தச் சிதைவுள்ளவர்கள் விடியற்காலை ஆறு, ஏழு மணிக்குள் சூரியக் குளியல் செய்யலாம். மற்ற நேரங்களில் இம்மருத்துவம் செய்யக் கூடாது.

(1 vote)