சுக்கான் கீரை – நம் கீரை அறிவோம்

பல மருத்துவகுணங்களை கொண்ட ஒரு அற்புதமான மூலிகையாகவும் கீரையாகவும் இந்த சுக்காங்கீரை. நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து என பலவிதமான சத்துக்கள் இந்த சுக்கான் கீரையில் உள்ளது. சுண்ணாம்பு சத்துக்கள், வைட்டமின் சி சத்துக்களும் அதிகளவில் உள்ளது. இந்த கீரையின் தண்டு, இலை, விதை என அனைத்து பாகங்களுமே மருத்துவத்திற்காக பயன்படக்கூடியது.

மூலநோய், மலச்சிக்கல், பித்தபேதி, இரத்த கழிச்சல், வயிறு சம்மந்தமான நோய், வாந்தி, பாம்பு, தேள்கடி, விஷக்கடி, பூச்சிக் கடி, ஆஸ்துமா, ஈரல் நோய், இருதய நோய், மூச்சுத் திணறல் என பல நோய்கள், தொந்தரவுகளை போக்கக் கூடியது இந்த சுக்காங் கீரை. பசியை அதிகரிக்கக் கூடிய கீரையிது. கல்லீரலுக்கு வலுவைத் தரக் கூடியது.

உஷ்ண நோய்களுக்கு

உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய நோய்களான பித்தம், வாயு நெஞ்செரிச்சல், இரத்தக் கழிச்சல், வெம்மையால் உண்டான கழிச்சல்கள் ஆகியவற்றையும் தடுக்கக் கூடிய ஆற்றலும், நிறுத்தக் கூடிய பண்பையும் இந்த சுக்காங் கீரை கொண்டுள்ளது.

ஜீரண உறுப்புகளுக்கு சிறந்தது

இந்த சுக்காங் கீரையை அவ்வப்பொழுது உண்பதால் மலச்சிக்கல் தொந்தரவுகள் முற்றிலும் அகலும். வயிறு சம்மந்தமான அனைத்து வியாதிகளும் விரைவில் நீங்கும்.

மூல நோய்க்கு

மூலநோயை குணமாக்கக் கூடிய ஒரு சஞ்சீவி மூலிகை இந்த சுக்காங் கீரை. உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளுமையை உண்டாக்கும் இந்த சுக்காங்கீரை சிறுநீரை அதிகளவில் வெளியேற்றக் கூடியதாகவும், ஜீரண சக்தியை அதிகளவில் அளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

பற்களுக்கு சுக்கான் கீரை

பல்லில் ஏற்படும் தொந்தரவுகள், வலிகளுக்கு மிக சிறந்த மருந்து இந்த சுக்காங் கீரை. இந்த கீரையின் சாறு பல்வலியை விரட்டக் கூடியது. சுக்கான் கீரையின் வேர்கள் பல்துலக்க உதவக்கூடியது. ஈறுகளை கெட்டியாக்கக் கூடியது. பல் சம்பந்தமான அனைத்து விதமான தொந்தரவுகளுக்கும் இந்த சுக்காங் கீரை சாறும் இந்த சுக்காங் கீரையின் வேரும் பல விதங்களில் பயன் அளிக்கக் கூடியதாக உள்ளது. பல் வலிகளை போக்கக் கூடியதாகவும் உள்ளது.

விஷக்கடிகளுக்கு

தேள் அல்லது ஏதேனும் பூச்சி கடித்துவிட்டால் சுக்காங் கீரையை வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கினால் விஷம் உடனே இறங்கிவிடும். இதன் விதையை நீர்விட்டு அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் தேன் விஷமானது மறைந்து விடும்.

வயிற்றுக் கடுப்பு, பசியின்மை நீங்க

சுக்காங் கீரையை அவ்வப்பொழுது உண்டு வர வயிற்றுக் கடுப்பு, பசியின்மை, சீதபேதி முதலிய தொந்தரவுகள் நீங்கும். இதயத்திற்கு வலுவூட்டக் கூடிய கீரையாகவும் இது உள்ளது.

சுக்காங் கீரையைக் கொண்டு கூட்டு, சட்னி, துவையல் என பலவிதமான உணவுகளை தயாரித்து உண்ணலாம். மது அருந்துபவர்கள் போதையினால் அவதிப்பட்டால் அதைத் தடுக்கக் கூடிய இயல்பு இந்தக் கீரைக்கு அதிகமாகவே உண்டு.

(7 votes)