vaivu pirachanai, Flatulence, Stomach Gas, Bad Smell

வயிற்று எரிச்சல் – காரணம் / தீர்வு

எதை சாப்பிட்டாலும் வயிற்று வலி, வயிற்று எரிச்சல் என பலர் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள, அவற்றிற்கான காரணங்களையும், அதனை எளிமையாக வீட்டு, பாட்டி வைத்திய முறையில் தீர்வு காணும் வழிகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

வயிற்று எரிச்சல் காரணங்கள்

பல காரணங்களால் பலருக்கும் வயிற்று வலி ஏற்படுவதுண்டு. உணவு செரிமானம் சீராக இல்லாத நிலை, பசித்து உணவருந்தாதது, செரிமான நீர் சுரப்பு குறைவு, அளவுக்கு அதிக உணவு, கணையத்தில் ஏற்படும் பாதிப்புகள், அதிகமான இரவு உணவு, முறை தவறி நீர் அருந்துதல், நேரம் கடந்த இரவு உணவு, பித்தப்பை தொந்தரவுகள், தூக்கமின்மை, அதிக கார உணவுகள், அமில உணவுகள், சத்து குறைபாடு, புளித்த உணவுகள், அதிக துரித உணவுகள் என பல காரணங்களால் வயிற்று எரிச்சல் ஏற்படுவதுண்டு. சரியான காலத்தில் இதனை கவனிக்காமல் விட்டால் வயிற்றுப்புண் ஏற்பட்டு அதனால் நாள்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதும், வாய்ப்புண் தொந்தரவும் அதிகமாகும்.

vaivu pirachanai, Flatulence, Stomach Gas, Bad Smell

பல நேரங்களில் போதுமான உணவை உண்டபின் ருசிக்காகவும், மீதமிருக்கிறதே என்றும் இருக்கும் உணவை உண்பதால் பலருக்கும் இந்த தொந்தரவு ஏற்படுகிறது. அதனால் பசிக்கு போதுமான உணவையும், பசி அடங்கியதும் அளவான உணவுடன் உணவை நிறுத்துவதுமே விரைவில் இந்த பாதிப்பிலிருந்து நம்மை காக்கும் சிறந்த வழி. இதனை பின்பற்றாமல் இருந்தால் உணவு செரிமானம் அவ்வப்பொழுது தடைபட அவை வயிற்றுக்குள் செரிமானமாகாமல் புளித்துப்போய் அதாவது நொதித்து கெட்டு எரிச்சலாக வெளிப்படுகிறது. அதேப்போல் இரவில் அதிக கார உணவும் இதனை அதிகப்படுத்துகிறது.

வயிற்று எரிச்சல் – தீர்வு

  • இரவு உணவை முடிந்தவரை இரவு ஏழு எட்டு மணிக்குள் முடித்துவிடவேண்டும்.
  • கார உணவு, துரித உணவு, புளித்த உணவு, அதிக எண்ணெய் சேர்த்த உணவுகளை இரவு தவிர்ப்பது சிறந்தது.
  • காலையில் அதிக நீர் அருந்துவது வயிற்று எரிச்சலை குறைக்கும்.
  • வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள், நார் சத்துக்கள் அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
  • கோபத்தை குறைத்து தியானம், யோகம் போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
  • பசித்து உணவருந்த வேண்டும்.
  • அளவான உணவு அவசியம்.
  • சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகள் ஆகியவற்றையும், பழங்கள் காய்கறிகளையும் அன்றாடம் எடுத்துக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.
  • அன்றாடம் நான்கைந்து ஊறவைத்த பாதாம் பருப்பு எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
  • மதிய உணவில் அதிகம் புளிக்காத தயிரை எடுத்துக்கொள்ளலாம்.
  • இஞ்சி தேநீர் அல்லது தேன் இஞ்சியை காலையில் எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
  • தான்றிக்காய், நெல்லிக்காய் சாறு வயிற்று எரிச்சலுக்கு நல்லது. வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையை கட்டுப்படுத்தும். இரண்டையும் சேர்த்தோ அல்லது தனியாகவோ அருந்தலாம்.
  • வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை பிழிந்து அதனுடன் சிறிது கல் உப்பு, தேன் கலந்து குடிப்பது உடனடியான வயிற்று எரிச்சலுக்கு நல்ல பலனை அளிக்கும்.

(1 vote)