vaivu pirachanai, Flatulence, Stomach Gas, Bad Smell

வயிற்று வலி தீர

வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள்

வயிற்று பிரச்சனைகளுக்கு கீழ்கண்ட மருத்துவ முறைகளும், உணவு முறைகளும் பெரிய அளவில் உதவக்கூடியதாக இருக்கும். சாதாரணமாக உண்ட உணவு சரியில்லாமல் இருக்கும் பொழுதும், சரியான நேரத்தில் சரியான அளவில் உணவை உட்கொள்ளாத பொழுதும், பசித்து உணவு உட்கொள்ளாத பொழுதும் வயிற்று வலி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வருவதை காண முடியும். இதற்கு எளிமையான சில தீர்வுகளை பார்க்கலாம்.

vaivu pirachanai, Flatulence, Stomach Gas, Bad Smell

குழந்தைகளுக்கு வயிற்று வலி

  • குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்று வலிக்கு சீரகத்தை வறுத்து நீரிட்டு பாதியாக குறைத்து தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
  • வெற்றிலையில் விளக்கெண்ணெய் தேய்த்து லேசாக சூடு செய்து குழந்தையின் வயிற்றில் பத்து போட்டால் கூட விரைவில் வயிற்றுவலி குணமாகும். பொருமல் வலி குணமாகும்.

வயிற்று வலி தீர்க்கும் புதினா

பொதுவாக புதினா துவையல் செய்து உண்பதால் அனைத்து விதமான வயிற்று வலி, வயிற்றுக் கோளாறுகளும் நீங்கும். அனைவருக்குமே கை மேல் பலன் கொடுக்கக் கூடியது.

பசியைத் தூண்ட

சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

வயிற்றுக் கடுப்பு குணமாக

  • மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
  • சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட குணமாகும்.
  • ஆமணக்கு துளிரை விளக்கெண்ணெயில் வதக்கி தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.
  • ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்றுவலி, வயிற்று பொருமல், அஜீரணம் குணமாகும்.
vaivu pirachanai, Flatulence, Stomach Gas, Bad Smell

தொப்பை குறைய

சுரைக்காயை வாரம் இரண்டு முறை கூட்டு அல்லது ஏதேனும் ஒரு வகையான உணவை தயாரித்து சாப்பிட்டு வர தொப்பை குறையும். வயிற்றில் இருக்கும் தேவையில்லாத சதைகள் குறையும்.

வயிற்று வலி தீர

கசகசா, கருப்பட்டி மற்றும் நான்கு கிராம்பு சேர்த்து பொடி செய்து மூன்று வேளையும் சாப்பிட எப்பேற்பட்ட வயிற்று வலியும் குணமாகும்.

வயிற்று பூச்சி ஒழிய

வயிற்றில் இருக்கும் பூச்சிகள் ஒழிய பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சி புழுக்கள் ஒழியும்.

அஜீரணம் நீங்க

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் நிவர்த்தியாகும்.

மற்ற வயிற்று தொந்தரவுகளுக்கு

  • தொடர் வயிற்று வலி உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிட குணமாகும்.
  • அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட வயிற்றில் இருக்கும் பூச்சிகள் ஒழியும்.
  • வாழைப்பூவை வாரம் ஒரு நாள் கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும்.
  • குடல் புண் குணமாகவும் வயிற்றுப் புழுக்கள் அழியவும் அகத்தி கீரை நல்லது.
  • வாழைத்தண்டு பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியிருக்கும் முடி, நஞ்சு ஆகியவை வெளியேறும்.
  • விளாம்பழத்தை கிடைக்கும் காலங்களில் தினமும் ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.
  • மிக முக்கியமாக இரவு உணவை ஏழு மணிக்குள் முடித்துவிட ஜீரண மண்டலம் சீராகும், பலப்படும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
(2 votes)