stachytarpheta jamaicensis; எழுத்தாணிப் பூண்டு
வயல்கொடுக்கு அல்லது எழுத்தாணிப்பூண்டு எனப் பெயர் கொண்டது இந்த மூலிகை. அதன் இலைகள் கட்டாரி போல் காணப்படுவதால் காட்டாரி என்பதாகும். இதற்கு முத்தெருக்கன் செவி என்ற பெயரும் உள்ளது. இதனுடைய இலைகள் சிறிசிறு பற்களுடன் முட்டை வடிவத்தில் இருக்கும். இந்த செடி எழுத்தாணி போன்ற உருண்ட தண்டுகளை கொண்டுள்ளது. இதனுடைய பூக்கள் நீல நிறத்தில் இருக்கும். தமிழகத்தில் வயல்வரப்புகளில் அதிகமாக பார்க்கப்படும் மூலிகை. இந்த எழுத்தாணிப் பூண்டின் இலை, வேர் ஆகியவை மருத்துவ பயன் கொண்டவை. சிறந்த ஒரு மலமிளக்கியாகவும் இது உள்ளது. குடல் வெப்பத்தையும் நீக்கும் அற்புதமான மூலிகை.
சருமநோய் உள்ளவர்கள் இந்த எழுத்தாணிப் பூண்டு இலையை சாறெடுத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி சொறி, சிரங்கு போன்ற தொந்தரவுகளுக்கு பூசி வர அவை நீங்கும். கரப்பான் பிளவைக்கும் நல்ல மருந்தாக இந்த எழுத்தாணிப் பூண்டு மூலிகை உள்ளது. மேலும் இந்த மூலிகை மார்பக வளர்ச்சிக்கும் உதவும்.