தானிய வடை / Sprouts Vadai

புரத சத்துகள் நிறைந்த தானிய வடை. எளிதாக தயரிக்கக்கூடியது. எளிதில் ஜீரணமாகக் கூடியது. பல பல வைட்டமின் சத்துக்களும், உடலுக்கு தேவையான வகையில் புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த தானிய வடை. முளைக்கட்டிய பயறுவகைகள், சிறுதானியங்கள் நிறைந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ள சிறந்தது. உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் ஏற்றது.

தேவையான பொருட்கள்

  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கருவேப்பிலை
  • உப்பு
  • செக்கு நல்லஎண்ணெய்

செய்முறை

பச்சைப்பயறு, கருப்பு உளுந்து, கறுப்புக் கொண்டைக் கடலை, காராமணி ஆகிய தானியங்களை முளைக்கட்ட முதல் நாளே அவற்றை நீரில் ஊறவைத்து பின் ஒரு துணியில் கட்டி முளைக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வாறு பயறுகளை முளைக்கடுவது?

முதலில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். 

பின் முளைகட்டிய தானியங்கள், சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து நன்கு அரைக்கவும். 

அரைத்த தானியங்களுடன், சிறுதானிய மாவு, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 

தண்ணீர் அதிகம் சேர்க்காது வடை மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக இருக்கவும்.

ஒரு வாணலியில் நல்லஎண்ணெய்யை சூடேற்றி அதில் சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு இருபுறமும் நன்கு சிவக்க பொன்னிறமாக எடுக்கவும். 

சூடான இந்த தானிய வடை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். 

தானிய வடை

புரத சத்துகள் நிறைந்த தானிய வடை. எளிதாக தயரிக்கக்கூடியது. எளிதில் ஜீரணமாகக் கூடியது. பல பல வைட்டமின் சத்துக்களும், உடலுக்கு தேவையான வகையில் புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த தானிய வடை. முளைக்கட்டிய பயறுவகைகள், சிறுதானியங்கள் நிறைந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ள சிறந்தது. உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் ஏற்றது.
ஆயத்த நேரம் : – 15 hours
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 15 hours 15 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் முளைகட்டிய பாசிப்பயிறு
  • 1/4 கப் முளைகட்டிய கருப்பு உளுந்து
  • 1/4 கப் முளைகட்டிய கறுப்புக் கொண்டைக் கடலை
  • 1/4 கப் முளைகட்டிய காராமணி
  • 1/4 கப் கம்பு மாவு, கேழ்வரகு மாவு, சிறு சோளம் மாவு சேர்த்து
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கருவேப்பிலை
  • உப்பு
  • செக்கு நல்லஎண்ணெய்

செய்முறை

  • பச்சைப்பயறு, கருப்பு உளுந்து, கறுப்புக் கொண்டைக் கடலை, காராமணி ஆகிய தானியங்களை முளைக்கட்ட முதல் நாளே அவற்றை நீரில் ஊறவைத்து பின் ஒரு துணியில் கட்டி முளைக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • முதலில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். 
  • பின் முளைகட்டிய தானியங்கள், சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து நன்கு அரைக்கவும். 
  • அரைத்த தானியங்களுடன், சிறுதானிய மாவு, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 
  • தண்ணீர் அதிகம் சேர்க்காது வடை மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக இருக்கவும்.
  • ஒரு வாணலியில் நல்லஎண்ணெய்யை சூடேற்றி அதில் சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு இருபுறமும் நன்கு சிவக்க பொன்னிறமாக எடுக்கவும். 
  • சூடான இந்த தானிய வடை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.