முளைகட்டிய வேர்க்கடலை சாலட்

உடல் பருமன், நீரிழிவு உட்பட பல பல தொந்தரவுகளுக்கு சிறந்த உணவு இந்த முளைக்கட்டிய வேர்க்கடலை சாலட். பெரியவர்கள் இதனை காலையில் உண்பது சிறந்த பலனை அளிக்கும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டி.

தேவையான பொருட்கள்

  • ½ கப் வேர்க்கடலை
  • ½ கப் பாசிப்பயறு
  • 2 தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 புதினா இலை

  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கருவேப்பிலை
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • இந்துப்பு 
  • மிளகு தூள்
  • சீரகத்தூள்

செய்முறை

உடல் பருமனை குறைக்கும் இந்த சாலட் செய்ய வேர்க்கடலையை முதல் நாள் காலையிலேயே சுமார் எட்டு மணிநேரம் நீரில் ஊறவைக்கவேண்டும். 

எட்டுமணி நேரத்திற்கு பின் வேர்க்கடலையை ஒரு லேசான துணியில் அல்லது வலைத்தூணியில் நீரை வடித்து விட்டு வைக்கவேண்டும். நிலக்கடலை / வேர்கடலை எவ்வாறு முளைகட்டுவது?

பாசிப்பயறை முதல் நாள் நீரில் ஊறவைக்கவேண்டும்.

காலையில் நீரை வடித்து விட்டு வலைத்தூணியில் முளைப்பதற்கு ஏற்றவாறு வைக்க வேண்டும். பச்சைப்பயறு / பாசிப்பயறு எவ்வாறு முளைக்கட்டுவது?

மாலை குழந்தைகள் வீட்டிற்கு வரும் நேரம் நன்கு முளைத்திருக்கும் வேர்கடலையையும், பாசிப்பயறையும் சேர்த்து அதனுடன் சிறிதாக நறுக்கிய தக்காளி, சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

இவற்றுடன் எலுமிச்சை சாறு தேவையான உப்பு மற்றும் மிளகு சீரகத் தூளினையும் ஒன்றாக கலந்து பரிமாறவும். 

முளைகட்டிய வேர்க்கடலை சாலட்

உடல் பருமன், நீரிழிவு உட்பட பல பல தொந்தரவுகளுக்கு சிறந்த உணவு. பெரியவர்கள் இதனை காலையில் உண்பது சிறந்த பலனை அளிக்கும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டி.
ஆயத்த நேரம் : – 1 day 10 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • ½ கப் வேர்க்கடலை
  • ½ கப் பாசிப்பயறு
  • 2 தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 புதினா இலை
  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கருவேப்பிலை
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • இந்துப்பு 
  • மிளகு தூள்
  • சீரகத்தூள்

செய்முறை

  • மாலை உணவிற்கு ஏற்ற இந்த சாலட் செய்ய வேர்க்கடலையை முதல் நாள் காலையிலேயே சுமார் எட்டு மணிநேரம் நீரில் ஊறவைக்கவேண்டும். 
  • எட்டுமணி நேரத்திற்கு பின் வேர்க்கடலையை ஒரு லேசான துணியில் அல்லது வலைத்தூணியில் நீரை வடித்து விட்டு வைக்கவேண்டும். 
  • பாசிப்பயறை முதல் நாள் நீரில் ஊறவைக்கவேண்டும்.
  • காலையில் நீரை வடித்து விட்டு வலைத்தூணியில் முளைப்பதற்கு ஏற்றவாறு வைக்க வேண்டும். 
  • மாலை குழந்தைகள் வீட்டிற்கு வரும் நேரம் நன்கு முளைத்திருக்கும் வேர்கடலையையும், பாசிப்பயறையும் சேர்த்து அதனுடன் சிறிதாக நறுக்கிய தக்காளி, சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
  • இவற்றுடன் எலுமிச்சை சாறு தேவையான உப்பு மற்றும் மிளகு சீரகத் தூளினையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.