sprain home remedy tamil suluku remedy

சுளுக்கு நீங்க

எதேர்ச்சியாக உடல் அசைவுகளில் ஏற்படும் ஒரு பாதிப்பு சுளுக்கு. பலருக்கும் தூக்கத்தில் கை, கால்கள், கழுத்து, முதுகு பகுதியில் சாதாரணமாக சுளுக்கு ஏற்படும். இதுமட்டுமல்லாமல் காயங்கள் ஏற்படும் பொழுதும், உடலில் சில சத்துப் பற்றாக்குறையாலும் இந்த சுளுக்கு அதிகமாக சிலரைத் தாக்கும். சுளுக்கு ஏற்பட்டால் அந்த இடத்தில் நல்ல வலி ஏற்படுவதும், அந்த இடத்தில் ஏற்படும் அசைவுகளாலும் அசைக்க முடியாதளவு வலி ஏற்படுவதையும் பார்க்கலாம். இதனால் நரம்புகள் பாதிக்கப்படுவதுடன், தசை நார்கள் கிழிவதும் அதிக பாதிப்பை அளிக்கும். அதனால் உடனடியாக சுளுக்கை நீக்குவதும் அவை வராமல் உடலைப் பாதுகாப்பதும்.

sprain home remedy tamil suluku remedy

நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும், தொடர்ந்து உடல் அசைவை சீராக வைத்துக் கொள்வதும், யோகா ஆசனம் போன்ற பயிற்சிகளை செய்வதாலும் சுளுக்கு அதிகமாக அல்லது அவ்வப்பொழுது ஏற்படுவதை தவிர்க்கலாம். இதற்கு வீட்டு மருத்துவ முறை சிலவற்றை பின்பற்ற சுளுக்கு உடனடியாக மறைய அவை உதவும் அல்லது அதனால் ஏற்படும் வலி உடனடியாக குறையும்.

சுளுக்கு, வலி உடனடியாக நீங்க

உப்பு, புளி ஆகியவற்றை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து அவற்றை கெட்டியாக சிறிது நீர் கலந்து கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த உப்பு புளி கரைசல் நன்கு கொதித்தப் பின் அடுப்பிலிருந்து இறக்கி இளம் சூடாக இருக்கும் பொழுது சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பற்று போட வேண்டும். சுளுக்கு நீங்க இது உதவுவதுடன் வீக்கம் இரத்தக் கட்டு மறையவும் உதவும். இதனுடன் பிரண்டை சாறு கலந்தும் இந்த கரைசலை தயாரித்து பற்றுபோட சுளுக்கு விரைவில் நீங்கும்.

தழுதாழை இலையை ஒரு கையளவு எடுத்து விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க அங்கு ஏற்பட்ட சுளுக்கு விரைவாக மறையும், வலியும் தீரும்.

(1 vote)