நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றிலிருந்து நம்மை காக்கவும் வந்த நோயை போக்கவும் உதவும் நம் சோளம். சோளம் என்றவுடன் பலருக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் மக்கா சோளம் அல்லது பேபி கார்ன் போன்றவை நினைவிற்கு வரும், அனால் சிறுதானிய வகையில் நாம் குறிப்பிடும் சோளம் அதுவல்ல. அதைவிட சிறிதாகவும் வெள்ளை, சிகப்பு நிறத்தில் இருக்கும் சோளத்தையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.
சிகப்பு நிற சோளம் கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டினை’ அதிகம் கொண்டுள்ளது. சோளத்தில் அடை, வடை, புட்டு, இட்லி, தோசை, பணியாரம் சுவையாக இருக்கும். எளிதாக சோளத்தை முளைக்கட்டி சுண்டலாகவும் உண்ணலாம்.
மேலும் சிறு சோளத்தின் பயன்கள் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – சிறுசோளம்.
மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.
தேவையான பொருட்கள்
- ½ கப் சிகப்பு சோளம்
- ¼ கப் துவரம்பருப்பு
- 2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 4 வர மிளகாய்
- 1 பெரிய வெங்காயம்
- ½ ஸ்பூன் சீரகம்
- கறிவேப்பிலை
- உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
சிகப்பு சோளம் மற்றும் பருப்பு வகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்தவற்றை தண்ணீர் வடித்து மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.
மேலே எண்ணெய் விட்டு இரண்டு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.
சுவையான சிகப்பு சோள அடை ரெடி.
சிகப்பு சோளம் அடை
தேவையான பொருட்கள்
- ½ கப் சிகப்பு சோளம்
- ¼ கப் துவரம்பருப்பு
- 2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 4 வர மிளகாய்
- 1 பெரிய வெங்காயம்
- ½ ஸ்பூன் சீரகம்
- கறிவேப்பிலை
- உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
- சிகப்பு சோளம் மற்றும் பருப்பு வகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- மிக்ஸியில் ஊற வைத்தவற்றை தண்ணீர் வடித்து மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
- அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
- கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.
- மேலே எண்ணெய் விட்டு இரண்டு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.
- சுவையான சிகப்பு சோள அடை ரெடி.
அரிசி?