வெண் தூதுவளை – மூலிகை அறிவோம்

Solanum trilobatum (Solanaceae); தூதுவளை

தூதுவளையில் பல வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்று ஊதா நிற பூக்கள் பூக்கும் தூதுவளை மற்றொன்று வெள்ளை நிற பூக்கள் பூக்கும் தூதுவளை. பெரும்பாலும் ஊதா நிற பூக்கள் பூக்கும் தூதுவளையை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். புதர்கள், செடி கொடி மண்டி இருக்கும் இடங்களில் சாதாரணமாக பார்க்கமுடியும்.

வெண்ணிறத்தில் இருக்கும் தூதுவளை பார்ப்பது அரிது. நுரையீரல் தொந்தரவுகள், காசநோய், ஆஸ்துமாவிற்கு சிறந்த மருந்து. உடல் வலிமையை அளிக்கக்கூடியது. பொதுவாக இந்த வெண் தூதுவளை புற்றுமண்ணில் சிறப்பாக வளரும். இதன் இலையை தினமும் வெறும் வயிற்றில் ஐந்து இலைகள் தொடர்ந்து உண்டு வந்தால் உடலிலும் உள்ளத்திலும் அற்புதமான மாற்றங்கள் நிகழ்வதை காணலாம்.

(9 votes)