குதியாட்டம், கயிற்றாட்டம், ஸ்கிப்பிங் என அனைவருக்கும் சிறுவயதில் விளையாட ஆசையாக இருந்த ஒரு விளையாட்டு. இது பல நன்மைகளைக் கொண்டது. அனைவரும் இதனை அன்றாடம் பயிற்சி செய்ய பல நன்மைகள் உண்டு. எந்த செலவும் இல்லாமல் சிறு இடத்தில் கூட வெறும் ஒரு கயிறைக் கொண்டு விளையாடும் விளையாட்டு.
ஆரம்பத்தில் ஐந்து நிமிடம் என தொடங்கி ஒவ்வொருநாளும் குறைந்தது பதினைந்து நிமிடம் முதல் இருபது நிமிடம் ஸ்கிப்பிங் செய்ய உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- உடலுக்கு சிறந்த ஒரு முழு உடற்பயிற்சி. உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை இருக்கும் நரம்புகள், தசை, எலும்புகள், இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
- உடலில் தேங்கும் தேவையில்லாத கழிவுகள், சதை விரைவில் பறந்தோடும். வீணாக பல ஆயிரங்களை செலவு செய்து பிரத்யேகமாக செய்யப்படும் பயிற்சிகளை விட மிக எளிமையாக எந்த பயிற்றுனரும் இல்லாமல் உடல் எடையைக் குறைக்கலாம். பிற பயிற்சிகளை விடவும் சிறந்த பலனை அளிக்கும். விரைவாக கெட்ட கொழுப்பை நீக்கும்.
- இடுப்பு, கை, கால், முதுகு, தொடை பகுதியில் இருக்கும் தொந்தரவுகள், சதையையும் குறைக்கும். முதுகுவலி, கால் வலி, கைவலி என உடல் வலிகள் காலப்போக்கில் மறையும். ஆரம்பத்தில் முதல் சில நாட்கள் வலிகள் அதிகரிப்பது போல் தோன்றினாலும் காலப்போக்கில் உடலின் அனைத்து பாகத்திற்கும் சீராக இரத்த ஓட்டம் செல்ல வலிகள் நீங்கும், உடல் பலப்படும்.
- சிலருக்கு நீண்ட நாட்களாக இருக்கும் இறுகிய தோள்பட்டை வலி, தாளிறுக்கம் (frozen shoulder) போன்றவை மெல்ல நீங்கும். ஆரம்பத்தில் செய்வது சற்று கடினமாக இருந்தாலும் மெல்ல பொறுமையாக பயிற்சி செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
கயிறாட்டம் / ஸ்கிப்பிங் நன்மைகள்
- இரத்த ஓட்டம் சீராகும்.
- மூளைக்கு சிறந்த புத்துணர்வளிக்கும்.
- எலும்புகள் பலப்படும், அடர்த்தி கூடும்.
- நரம்புகள் வலுபெறும்.
- உடல் எடை குறையும்.
- நிணநீர் ஓட்டம் சீராகும்.
- இரத்த அழுத்தம் குறையும்.
- சுவாசத்தை சமநிலைப்படுத்தும்.
- சிறந்த மூச்சுப் பயிற்சியை அளிக்கும்.
- மனசோர்வு நீங்கும்.
- ஹோர்மோன் சமநிலைப்படும்.
- கால், பாத வலிகள், மூட்டுவலிக்கு சிறந்த பயிற்சி.
- உடலின் ஒருங்கிணைந்த செயல்பாடு அதிகரிக்கும்.
- இதயம் புத்துணர்வடையும். செயல்பாடு சீராகும்.
- நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
- உடலின் தெம்பு அதிகரிக்கும்.
- கண்கள் பளிச்சிடும்.