தோல் நோய்களுக்கு மூலிகை குளியல்

அதிக இரசாயனங்கள் கொண்ட பூச்சுகள், சோப்பு ஆகியவற்றை பயன்படுத்துவதால் நமது சருமம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இதற்கு நல்ல தீர்வை அளிக்கும் சில இயற்கை முறைகளை பார்க்கலாம். அதற்கு முதலில் தக்காளி சாறு, கேரட் சாறு, எலுமிச்சை சாறு, தேங்காய் பால் போன்றவற்றை தயார் செய்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து உடல் முழுவதும் நன்றாகப் பூசி கொண்டு 20 முதல் 30 நிமிடம் கழித்து சாதாரண நீரின் அல்லது வெந்நீரில் வழக்கம் போல் குளித்து விடலாம்.

இச்சாறுகளில் கேரட்டுக்கும் தேங்காய்க்கு மட்டும் சிறிது தண்ணீர் கலந்து கெட்டியாக சாறு தயார் செய்ய வேண்டும். தக்காளி எலுமிச்சை பழத்திற்கும் தண்ணீர் கலக்காமல் சாறு தயார் செய்து பயன்படுத்த வேண்டும்.

சொறி, சிரங்கு, தேமல், படை போன்ற எல்லா விதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இருப்பதுடன் விரைவில் குணமாகும் குளியல் முறைகள் இவை. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாறி மாறி இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி குளியல் செய்ய வேண்டும்.