குறுந்தொட்டி – நம் மூலிகை அறிவோம்

Pavonia Zeylanica; குறுந்தொட்டி; சிற்றா முட்டி

தமிழகத்தில் கிராமங்களில் வயல்வரப்புகளில் சாதாரணமாக பார்க்கப்படும் மூலிகைகளில் ஒன்று இந்த குறுந்தொட்டி மூலிகை. பல நோய்களுக்கு மிக சிறந்த மருந்து. சிறுந்தொட்டி, சிறு குறுந்தொட்டி, சித்தாமுட்டி, சிற்றா முட்டி என பல பெயர்கள் இந்த மூலிகைக்கு உண்டு. இது ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது.

இந்த சிற்றாமுட்டி செடியில் ஓட்டும் தன்மைக் கொண்ட ரோமங்கள் இருக்கும். இதன் இலைகள் முட்டை வடிவத்தில் மூன்று சிறு மடலுடன் பல்லுள்ள இலைகள். இதன் மலர்கள் இளஞ்சிவப்பு நிறத்துடன் இருக்கும். இதன் காய்கள் மென்மையான ரோமங்களுடன் வட்ட வடிவத்திலிருக்கும். இந்த செடியின் விதைகளும், சமூலமுமே பயன்படக்கூடியது.

உடலில் ஏற்படும் வறட்சியை அகற்றி, சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் கொண்டது இந்த குருந்தொட்டி மூலிகை. பித்த நோய்கள், கண் நோய்கள், வயிற்றுவலி நோய்கள், முகவாதம், எலும்பு ஜூரம், பாரிச வாயு போன்ற தொந்தரவிற்கு மிகச் சிறந்தது. இதன் வேர் எலும்புகளுக்கும், பித்த நோய்களுக்கும் மிகச் சிறந்தது.

சிற்றா முட்டி / குருந்தொட்டி பயன்கள்

  • இந்த சிற்றாமுட்டி / குறுந்தொட்டி வேரை குடிநீரிட்டுக் எடுக்க வயிற்றுவலி, எலும்பைப் பற்றிய ஜுரம், பித்த நோய்கள், ஜுர தாகம் நீங்கும்.
  • குறுந்தொட்டி வேர்ப்பொடியைக் கசயமாகக் காய்ச்சி அதனுடன் சுக்கு, மிளகு, ஏலம், வெட்டிவேர் போன்ற மூலிகைகளையும் சேர்த்து அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி, வாரம் இரண்டு முறை தலைக்கு தேய்த்து குளித்துவர வாத நோய்கள், கண் நோய்கள் நீங்கும்.
(7 votes)