சிறுகீரை – நம் கீரை அறிவோம்

சாதாரணமாக சந்தைகளில் பார்க்கப்படும் ஒரு கீரை வகைகள் தான் சிறுகீரை. கிராமங்களில் நகரங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் கீரை இது. முளைக்கீரை, தண்டுக்கீரை இனத்தை சேர்ந்தது. இந்த கீரையின் இலைகள் சிறிதாகவும் சத்துக்கள் மிக அதிகமும் கொண்ட ஒரு கீரை இது.

இந்த சிறுகீரையின் இலைகளையும் தண்டுகளையும் உணவாக தயாரிக்கலாம். இந்த கீரையில் மசியல், கடையல் அல்லது பொரியல் செய்து உண்ண சுவையாக இருக்கும்.

விஷக்கடிகளுக்கு முறிவாகப் பயன்படக்கூடிய ஒரு அற்புதமான கீரை. வாத பித்தம் சம்பந்தமான நோய்களையும், காசம், படை போன்ற நோய்களையும் போக்கவல்லது. இந்த கீரையை அவ்வப்பொழுது உபயோகித்து வந்தால் உடலுக்கு அழகையும் வனப்பையும் கொடுக்கும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன. வயிற்றுப்புண், சிறுநீரகம் கணையத்தில் வரும் தொந்தரவுகளை போக்கும், ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மையும் கொண்ட ஒரு சிறந்த கீரை.

100 கிராம் சிறுகீரை கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

  • வெப்பம் 33 கலோரி
  • புரதம் 2.8 கிராம்
  • கொழுப்பு 0.3 கிராம்
  • மாவுச்சத்து 4.8 கிராம்
  • நீர்ச்சத்து 90 கிராம்
  • தாது உப்புகள் 2.1 கிராம்
  • சுண்ணாம்பு சத்துக்கள் 251 மில்லி கிராம்
  • மணிச்சத்து 55 மில்லி கிராம்
  • இரும்புச்சத்து 27.3 மில்லிகிராம்