சொர்க்க மரம் – மூலிகை அறிவோம்

Simarouba glauca; சொர்க்கமரம்; Paradise Tree

சொர்க்க மரத்தில் உள்ள அரிய வகை தாது புற்றுநோய்களின் பாதிப்பைத் தடுத்துக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. அனைத்து வகை மண்ணிலும் வளரும் ஆற்றல் கொண்டது இந்த மரம். நல்ல உயிர்சக்தியை அளிக்கும் மரம் இது. வேப்பமரத்தைப் போன்று பயனளிக்கும் மரம். காற்றை சுத்திகரித்து சுத்தமான காற்றை அளிக்கும் தன்மை கொண்ட மரம். இம்மரத்தின் இலை, விதை, வேர், கனியின் தோல், கனி ஆகியவை பயன்படக்கூடியது.

சொர்க்க மரம் என்னும் லட்சுமி மரத்தின் இலைகளைச் சேகரித்து, அவற்றை நன்கு அலசி சிறிது தண்ணீரில் இட்டு, நன்கு கொதித்துச் சுண்டி வரும் போது அந்தத் தண்ணீரை எடுத்து, தினமும் இரு வேளை பருகி வர விரைவில் உடலில் உள்ள பாதிப்புகள் மெள்ள விலகும். லட்சுமி மரம், சிமரூபா போன்ற பெயர்களும் கொண்டது இந்த சொர்க்க மரம்.

அழகு சாதன பொருட்கள், இயற்கை சோப்பு, மெழுகுப் பொருட்கள், மர பொருட்கள் தயாரிக்கவும் இந்த மரம் பயன்படுகிறது.

(4 votes)