புதர்ச் செடி மூலிகைகள்

ஆவாரை

ஆவரையின் பூக்கள் மற்றும் இலைகள் ரத்த நோய்களுக்கு உகந்த மருந்தாகும். உடல் வெப்பமகற்றியாகவும், உடல் தேற்றியாகவும், உடல் துர்நாற்றம் நீக்கியாகவும் செயல்படும் பண்புகளை கொண்டது.

avaram-avarampoo-aavaram-poo-Senna-Auriculata-Tanners-cassia-yellow-flower-avaram-senna-flower-Cassia-Auriculata-avarampoo-benefits-in-tamil-uses-medicinal-benefits-diabetic-weight-loss

ஆடாதொடை

ஆடாதொடையின் இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சளி, இருமல் தணிப்பான். வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் கழுத்துவலி ஆகிய நோய்களுக்கு அருமருந்தாகவும் உள்ளது.

கொடிவேலி

மருத்துவ பயனுள்ள வெண்கொடிவேலி (வெள்ளை மலர்கள்), செங்கொடிவேலி (சிவப்பு மலர்கள்), கொடிவேலி (நீலமலர்கள்) ஆகியன தொழுநோய் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களை குணமாக்க உதவும் சிறந்த மூலிகையாகும்.

சர்பகந்தா

சர்பகந்தியின் வேர்கள் திக்குவாய், மூளைக் கோளாறு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை சீராக்க பயன்படுகிறது.

செம்பருத்தி

செம்பருத்தியின் இலைகளும் மலர்களும் இதய நோய்கள், வெப்பம், இருமல், தலைவலி, சிறுநீரக நோய்கள் ஆகியவற்றைத் தணிக்கும் தன்மை கொண்டவை.

https://www.youtube.com/watch?v=ra62nn9FKyc&t=504s