எள்ளுருண்டை / Sesame Ball

வளரும் குழந்தைகளுக்கு உடல் பலத்தையும் பெண்களுக்கு வலுவையும் சீராக அளிக்கும் சிறந்த சிற்றுண்டி இந்த எள்ளுருண்டை. அன்றாடன் குழந்தைகள் உட்கொள்ள சத்துக் குறைபாடு என்ற தொந்தரவே வராது. For Sesame Balls recipe in English.

பெண்கள் இந்த எள்ளுருண்டையை அன்றாடம் உட்கொள்ள மாதவிடாய் தொந்தரவுகள் பல எளிமையாக நீங்கும். சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல தாது சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும் நிறைந்தது.

தேவையான பொருட்கள்

  • 1 கப் எள்
  • முந்திரிப் பருப்பு
  • உலர்ந்த திராட்சை
  • ஏலக்காய் தூள்
  • பனங்கற்கண்டு / கருப்பட்டி

செய்முறை

  • எள்ளுருண்டைக்கு கருப்பு அல்லது வெள்ளை எள்ளை பயன்படுத்தலாம். கருப்பு எள் அதிக சுவையையும் மணத்தையும் அளிக்கும், மேலும் அதிக சத்துக்களையும் அளிக்கும்.
  • முதலில் எள்ளை நன்கு தேய்த்துக் கழுவி காய வைத்து கல் நீக்கி சுத்தம் செய்து காயவைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதனை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

  • அதனுடன் முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்த் தூள், பனங்கற்கண்டு / கருப்பட்டி சேர்த்து உரலில் இடித்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவேண்டும்.
  • அவ்வளவுதான் சுவையான சத்தான எள்ளுருண்டை தயார்.
  • குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் அன்றாடன் உட்கொள்ள உடல் வலுப்படும்.

எள்ளுருண்டை

வளரும் குழந்தைகளுக்கு உடல் பலத்தையும் பெண்களுக்கு வலுவையும் சீராக அளிக்கும் சிறந்த சிற்றுண்டி இந்த எள்ளுருண்டை. அன்றாடன் குழந்தைகள் உட்கொள்ள சத்துக் குறைபாடு என்ற தொந்தரவே வராது. பெண்கள் இந்த எள்ளுருண்டையை அன்றாடம் உட்கொள்ள மாதவிடாய் தொந்தரவுகள் பல எளிமையாக நீங்கும். சுண்ணாம்பு சத்துக்கள் உட்பட பல தாது சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும் நிறைந்தது.
ஆயத்த நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 5 minutes