செம்பருத்தி தேநீர்

தினமும் செம்பருத்தி பூக்களை உட்கொள்ள இருதய நோய், இரத்த அழுத்தம் உட்பட பல நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொந்தரவுகள், வெள்ளைப்படுதல், நீர்க்கட்டி, அதிக உதிரப்போக்கு போன்ற தொந்தரவுகளுக்கு இந்த செம்பருத்தி சிறந்த மருந்தாக உள்ளது.

செம்பருத்தியை தேநீராக தயாரித்து பருக சிறந்தது. மேலும் கூந்தல் வளர்ச்சிக்கும், மேனி அழகிற்கும் அதிகமாக உதவக் கூடியதாகவும் உள்ளது. உடல் வெப்பத்தை தணிக்கும் இந்த செம்பருத்தி நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும் சிறந்த மருந்தாகவும் உள்ளது.

உடல் பருமனை குறைக்க மிக சிறந்த எளிமையான தேநீரகவும் இது உள்ளது. மேலும் செம்பருத்தியின் பயன்கள், மருத்துவகுணங்களை தெரிந்துக்கொள்ள – இங்கு இணையவும்.

தேவையான பொருட்கள்

  • 2 – 3 செம்பருத்தி பூ, (காய்ந்ததும் பயன்படுத்தலாம்)
  • 4 இலைகள் துளசி
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
  • 1 சிட்டிகை சுக்கு
  • நாட்டு சர்க்கரை / தேன்

செய்முறை

  • ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் புதிதாக பூத்த 2 – 3 செம்பருத்தி பூக்களையும் சேர்த்து அதனுடன் நான்கு துளசி இலை, சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • ஒரு கொதி வந்த உடன் அடுப்பை அணைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். தேன் சேர்ப்பதாக இருந்தால் ஐந்து நிமிடத்திற்குப் பின் சேர்க்கவும். (இதமான சூடு வந்தபின்).

  • ஐந்து நிமிடத்தில் சூடான சுவையான் சத்தான மணம் நிறைந்த செம்பருத்தி தேநீர் தயார்.
  • வடிகட்டி பருகலாம்.
  • அவ்வபொழுது காலை நேரத்தில் பருக உடலும் மணமும் பலப்படும்.
  • இந்த பொருட்களை நிழலில் உலர்த்தி ஒன்றாக கலந்தும் வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

பயன்கள்

  • செம்பருத்தி தேநீரை ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடிக்க பெண்களுக்கு ஏற்ப்படும் பல பாதிப்புகள் சீராகும்.
  • இரத்த அழுத்தம் சீராகும்.
  • இதயத்தை பலப்படுத்தும்.

  • உடல் பருமனை குறைக்கும்.
  • நினைவாற்றல் அதிகரித்து புத்தி கூர்மை ஏற்படுத்தும்.
  • தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
  • உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சி தரும்.

மேலும் செம்பருத்தியை ஜூஸ், தேநீரகவும் செய்து பருகலாம். செம்பருத்தியை எளிமையாக வீட்டில் ஒரு தொட்டியில் எவ்வாறு வளர்க்கலாம் என்பதையும் இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

செம்பருத்தி தேநீர்

(1 vote)



ஆன்டி அக்ஸிடன்ட் நிறைந்த சுவையான சிகப்பு தேநீர். உடலில் சோம்பல் நீக்கி சுறுசுறுப்பை அளிக்கும் அற்புத பானம். உடலில் ஏற்படும் பல தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாகவும் இந்த தேநீர் உள்ளது.



தேவையான பொருட்கள்
  • 2 – 3 செம்பருத்தி பூ, (காய்ந்ததும் பயன்படுத்தலாம்)
  • 4 இலைகள் துளசி
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
  • 1 சிட்டிகை சுக்கு
  • நாட்டு சர்க்கரை / தேன்
செய்முறை
  1. ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் புதிதாக பூத்த 2 – 3 செம்பருத்தி பூக்களையும் சேர்த்து அதனுடன் நான்கு துளசி இலை, சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
  2. ஒரு கொதி வந்த உடன் அடுப்பை அணைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். தேன் சேர்ப்பதாக இருந்தால் ஐந்து நிமிடத்திற்குப் பின் சேர்க்கவும். (இதமான சூடு வந்தபின்)
  3. ஐந்து நிமிடத்தில் சூடான சுவையான் சத்தான மணம் நிறைந்த செம்பருத்தி தேநீர் தயார்,
  4. வடிகட்டி பருகலாம்.
  5. அவ்வபொழுது காலை நேரத்தில் பருக உடலும் மணமும் பலப்படும்.

(1 vote)