சீரக சம்பா பிரியாணி / Seeraga Samba Biryani

பிரியாணி என்றாலே அது சீராக சம்பா பிரியாணி தான் என்றளவிற்கு அதன் இயற்கை சுவையும், இயற்கை மணமும் நிறைந்த அரிசி சீராக சம்பா அரிசி பிரியாணி. தமிழகத்தை சேர்ந்த பாரம்பரிய அரிசிகளில் அனைவரும் விரும்பும் பிரதானமான அரிசி இந்த சீரக சம்பா அரிசி.

மேலும் சீரக சம்பா அரிசியைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – சீரக சம்பா அரிசி.

தேவையான பொருட்கள்

  • 1 கப்  சீரக சம்பா அரிசி
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • ½ கப் கேரட்
  • ½ கப் ப‌ட்டாணி
  • ½ கப் பீன்ஸ்
  • 1 சிட்டிகை ம‌ஞ்ச‌ள் தூள்
  • உப்பு
  • 3 ப‌ச்சை மிள‌காய்

  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • 2 ஸ்பூன்   இஞ்சி பூண்டு விழுது
  • நல்லெண்ணெய்
  • 2 ஸ்பூன் பசு நெய்
  • 1 ப‌ட்டை
  • 1 கிராம்பு
  • 1 ஏல‌ம்

செய்முறை

  • வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். 
  • சீரக சம்பா அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • ஒரு மண்சட்டியில் எண்ணெய்யையும், நெய்யும் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்க்கவும். 

  • இவை சற்று வெந்ததும் காய்கறிகளையும் அதன் பின் கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இவை நன்கு வெந்ததும் ஊறவையிருக்கும் சீராக சம்பா அரிசியினையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும். 
  • இவற்றிற்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து மண்சட்டியில் வேகவிடவும். நன்கு கொதித்து வெந்ததும் அடுப்பை அணைத்து மூடிவைக்கவும். 
  • பத்து நிமிடத்திற்கு பின் திறந்து லேசாக கிளறி விட்டு பரிமாறவும். 
  • நமது பாரம்பரிய சீரக சம்பா பிரியாணி இயற்கையான பிரியாணி மணத்துடன் சுவையாக இருக்கும்.

5 from 1 vote

சீரக சம்பா பிரியாணி

பிரியாணி என்றாலே அது சீரக சம்பா பிரியாணி தான் என்றளவிற்கு அதன் இயற்கை சுவையும், இயற்கை மணமும் நிறைந்த அரிசி சீரக சம்பா அரிசி பிரியாணி. தமிழகத்தை சேர்ந்த பாரம்பரிய அரிசிகளில் அனைவரும் விரும்பும் பிரதானமான அரிசி இந்த சீரக சம்பா அரிசி.
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 40 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 1 கப்  சீரக சம்பா அரிசி
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • ½ கப் கேரட்
  • ½ கப் ப‌ட்டாணி
  • ½ கப் பீன்ஸ்
  • 1 சிட்டிகை ம‌ஞ்ச‌ள் தூள்
  • உப்பு
  • 3 ப‌ச்சை மிள‌காய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • 2 ஸ்பூன்   இஞ்சி பூண்டு விழுது
  • நல்லெண்ணெய்
  • 2 ஸ்பூன் பசு நெய்
  • 1 ப‌ட்டை
  • 1 கிராம்பு
  • 1 ஏல‌ம்

செய்முறை

  • வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். 
  • சீரக சம்பா அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  • ஒரு மண்சட்டியில் எண்ணெய்யையும், நெய்யும் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்க்கவும். 
  • இவை சற்று வெந்ததும் காய்கறிகளையும் அதன் பின் கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இவை நன்கு வெந்ததும் ஊறவையிருக்கும் சீராக சம்பா அரிசியினையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும். 
  • இவற்றிற்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து மண்சட்டியில் வேகவிடவும். நன்கு கொதித்து வெந்ததும் அடுப்பை அணைத்து மூடிவைக்கவும். 
  • பத்து நிமிடத்திற்கு பின் திறந்து லேசாக கிளறி விட்டு பரிமாறவும். 
  • நமது பாரம்பரிய சீரக சம்பா பிரியாணி இயற்கையான பிரியாணி மணத்துடன் சுவையாக இருக்கும்.
(2 votes)

1 thought on “சீரக சம்பா பிரியாணி / Seeraga Samba Biryani

  1. Devanand Ponniah

    5 stars
    Good!

Comments are closed.