பாதாள மூலி என்ற இந்த மூலிகை தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தானாக வளரக்கூடியது. பொதுவாக இதனை விஷச் செடி என பலர் நினைப்பதுண்டு ஆனால் அதிக நன்மையையும் சத்துக்களையும் அளிக்கக்கூடியது. இதனைப் சப்பாத்திக் கள்ளி என்றும் நாக தாளி என்றும் கூறுவதுண்டு. கிராமப்புறங்களில் சிறுவர்கள் இதன் பழத்தை உண்டு உதடுகள் சிவப்பு வண்ணப்பூச்சு இட்டதுபோல் இருக்க மகிழ்ந்து விளையடுவார்கள்.
விஷத்தன்மை வாய்ந்த உணவு அல்லது மருந்தினை தெரிந்தோ தெரியாமலோ சாப்பிட்டு விட்டால் அதற்கு இந்த சப்பாத்திக்கள்ளி நல்ல விஷ முறிவாக பயன்படும். நீராக தொடர்ந்து போகும் பேதியை கட்டுப்படுத்தும். உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும் இயல்பு இதற்கு உண்டு. உஷ்ணம் காரணமாகத் தோன்றும் வயிற்று வலி, அடிக்கடி மலம் போதல், நாட்பட்ட கிராணி போன்ற பிணிகளுக்கு உடனடி நிவாரணத்தை இது அளிக்கும்.

இந்த பாதாள மூலியின் பட்டைகளை இளசாகப் பார்த்து சேகரித்து முள் மேல் தோல் முதலியவற்றை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். இந்த துண்டுகளுடன் சிறிது மிளகுத் தூள் தூவி காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் தெரியும்.
சப்பாத்திக் கள்ளி பயன்கள்
- குழந்தை பேறு அளிக்கும் அற்புத பழம்.
- சருமத்தை பாதுகாக்கும்.
- தேவையற்ற கொழுப்பை அகற்றும்.
- உடல் பருமனை குறைக்க உதவும்.
- பித்தப்பை, மலக்குடல் தொந்தரவுகள் மறையும்.
- கல்லீரலுக்கு நல்லது.
- சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
- வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு பின் சாப்பிட உடல் பலப்படும்.
- ஞாபக மறதிக்கு நல்லது.
மேலும் இந்த சப்பாத்திக்கள்ளியின் பயன்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள
சப்பாத்திக்கள்ளியை எவ்வாறு பயன்படுத்துவது என தெரிந்துக் கொள்ள