சப்போட்டா மரம் உஷ்ண பிரதேசங்களில் பரவலாகப் காணப்படும் மரம். பார்வைக்கு கம்பீரமாக இருக்கும் இந்த மரம் வருடம் முழுவதும் பூத்துக் காய்க்கும் தன்மை கொண்டது.
இதன் பழங்கள் முட்டை வடிவமாகவும், தவிட்டு நிறத்துடன் உருளைக்கிழங்கை போல் காணப்படும். பழத்தின் உட்பகுதி மென்மையாகவும், இனிமையாகவும், நேர்த்தியான ருசியுடனும் இருக்கும். அழுத்தம் ஏற்பட்டால் இப்பழம் விரைவில் கரைந்து போய் விடும் இயல்புடையது, எனவே இதை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
முதிர்ச்சியடையாத பழங்கள் டானின் என்ற நொதிப்பொருள் இருப்பதால் பால் போன்ற திரவகம் இருப்பதாலும் அவை உண்பதற்கு ஏற்றதாக இருக்காது. முதிர்ச்சியடையாத பழங்கள் உடலுக்கு தீமை செய்யும். இப்பழத்தில் அதிக அளவு சர்க்கரை பொருள் அதாவது 14 சதவிகிதம் உள்ளது. இப்பழத்திலிருந்து சர்பத் தயாரித்தும் பயன்படுத்தலாம். பழக்கலவை செய்தும் உண்ணலாம். நன்கு பழுத்த பழத்தை உண்பதால் புத்துணர்ச்சி ஏற்படும்.
சப்போட்டா பழத்தின் நன்மைகள்
- வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்தது.
- கண்கள் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு மருந்தாகவும் உள்ளது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியதாகவும் உள்ளது. உடலின் ஆற்றலை அதிகரிக்க சிறந்த ஒரு பழம்.
- இதயம் சம்பந்தமான நோய்களுக்கு அற்புதமான ஒரு பழம்.
- உடலில் ஏற்படும் வீக்கங்கள், வலிகளுக்கும் சிறந்தது.
- மலச்சிக்கலை தடுக்கும்.
- ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் கொண்ட ஒரு அற்புதமான பழம்.
- ரத்தக்கொதிப்பிற்கு ஒரு சிறந்த பழம்.
- மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
- ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
- ரத்தசோகையை கட்டுப்படுத்தக்கூடியது.