Clerodendron inerme; Smooth Volkameria; சங்கங்குப்பி
உடலைத் தேற்றும் மூலிகைகளில் ஒன்றானது இந்த சங்கங்குப்பி. இது ஒரு பால் வகை செடித் தாவரமாகும். பல இடங்களில் புதர் செடியாக வளருவதுண்டு. வெள்ளை நிற பூக்களைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தனி இலைகளாகவும் இலைக்கோணத்தில் கொத்தாக பூக்களுமிருக்கும். இதனுடைய கனிகள் கடினமான உள்ளுறையுடன் இருக்கும். கைப்பு சுவைக் கொண்ட சங்கங்குப்பி மூலிகையின் இலை, வேர், பால், பழம் ஆகியவை பயனுடையது.
உடலில் ஏற்படும் வெப்பத்தை அகற்றி, உடல் தேற்றி, உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் மூலிகை. இது மட்டுமல்லாமல் உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு, குஷ்டம், வெள்ளை, கப நோய்கள், பாம்புக்கடிகள், வெப்பத்தினால் உண்டாகும் நோய்கள், சிறுநீர்க்கட்டு போன்ற நோய்களுக்கும் சிறந்த பலனை அளிக்கும். புற்றுநோய்க்கும் சிறந்த பலனை அளிக்கும் மூலிகையாக இது உள்ளது.
குளியல் நீர்
சங்கங்குப்பி இலைகளை சுடுநீரில் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் அந்நீரைக் கொண்டு குளித்து வர சொறி, சிரங்கு, வெறி நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.
பாம்புக் கடி விஷம் முறிய
சங்கங்குப்பி இலையைக் கொண்டு சாறெடுத்து கால் லிட்டர் வரை கொடுக்க பாம்புக் கடி விஷம் முறியும்.
காய்ச்சல் தீர
நாட்பட்ட காய்ச்சல், விட்டு விட்டு வரும் காய்ச்சல் மற்றும் நச்சு கலந்த இரத்ததினால் ஏற்படும் நோய்களுக்கு சங்கங்குப்பி இலைச்சாறு சிறந்த பலனை அளிக்கும். ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் அளவு சங்கங்குப்பி இலைச்சாறை தினமும் 2 வேளை எடுத்து வர இவை தீரும்.
சங்கங்குப்பி தைலம்
சொறி, சிரங்கு, கரப்பான், வெள்ளை, வெட்டை, குடற் புழுக்கள் போன்றவற்றிக்கு சங்கங்குப்பி இலைச் சாற்றுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து காய்ச்சி காலை மாலை என இருவேளை அரை ஸ்பூன் அளவு எடுத்துவர விரைவில் நீங்கும். இந்த காலத்தில் உப்பு புளி ஆகியவற்றை சேர்க்காமல் பத்திய உணவு எடுக்க வேண்டும்.