ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய கட்டை சந்தனக் கட்டை. அற்புத மூலிகையான சந்தனக்கட்டை வீட்டிலிருக்க பல விதங்களில் அது நமக்கு பயனை அளிக்கும். கோடை வெப்பம் அதிகரிக்கும் நேரத்தில் நமக்கு உதவும் உற்ற நண்பன் சந்தனம். சந்தனத்தில் மூன்று வகையுண்டு. சிவப்பு நிறச் சந்தனம் மருத்துவத்திற்கு சிறந்தது, மஞ்சள் நிறம் நடுத்தரம் மற்றொன்று வெண்ம நிற சந்தானம்.
முகப்பரு மறைய
தீராத முகப்பரு முற்றிலும் மறைய சந்தனம், மிளகு, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகப்பருவின் மீது 10 நாட்கள் தொடர்ந்து தடவ வடு முழுமையாக மறையும். எளிமையான வீரியமான நிவாரணம் இது.
சரும நோய்
சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அந்த சாற்றைப் பூச நமைச்சல், சொறி, சிரங்கு, அக்கி, தேமல் போன்ற சரும நோய்கள் விரைவில் நீங்கும்.
நாவறட்சி / தாகம்
தணியாத நாவறட்சி, எவ்வளவு நீர் குடித்தாலும் தாகம் தணியாத நிலை ஏற்பட்டால் அதனை சந்தனமும் இளநீரும் நீக்கும். இளநீரில் ஒரு சிறிய துளையிட்டு அதனுள் சந்தனக் கட்டையை இழைத்து சிறிதளவு எடுத்து இளநீரில் போட்டு ஊற வைத்து சிறிது நேரத்திற்குப்பின் வடிகட்டி அருந்த தாகம் முற்றிலும் அடங்கும்.
வேர்க்குரு
கோடையில் ஏற்படும் வேர்க்குருவிற்கு சந்தனத்தை இழைத்து வேற்குருவில், முகம், கழுத்து, முதுகு ஆகிய இடங்களில் பூசி வர வேர்க்குரு பட்டுப் போகும்.
தலைவலி
ஜுரத்தால் ஏற்படுவதால் வரும் தலைவலி, புருவ வலி ஆகியவற்றிற்கு சந்தனத்தை தேனில் அரைத்து நெற்றியில் பற்றுப் போட உடனே நல்ல பலன் கிடைக்கும்.
வயிற்றுப் பொருமல், வெப்பம் தணிய
சந்தனத்தை அரைத்து அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து 10 நிமிடம் தெளிய வைத்து, பின் தெளிந்த ஒரு டம்ளர் நீரில் தேன், சர்க்கரை கலந்து உண்டால் வயிற்றுப் பொருமல், சீதக் கழிச்சல், வெப்பம் தணியும்.
சுரம், மாந்தம் நீங்க
சந்தனக் கட்டையை பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை நன்கு காய்ச்சிய நீரில் கலந்து சிறிது நேரத்திற்குப் பின் வடிகட்டி அருந்தினால் சுரம், மாந்தம், மார்புத் துடிப்பு மறையும். இந்நீர் தீவிர நாடி நடையை நன்னிலைப்படுத்தவும் செய்யும்.