சம்பா மோசனம் – நமது பாரம்பரிய அரிசி

படகில் சென்று அறுவடை செய்யும் ரகம் இந்த சம்பா மோசனம்.

வரப்புயர நீர் உயரும்;

நீர் உயர நெல் உயரும்;

நெல் உயரக் குடி உயரும்;

குடி உயரக் கோன் உயர்வான்

வரப்புயர நீர் உயரும்;
நீர் உயர நெல் உயரும்;
நெல் உயரக் குடி உயரும்;
குடி உயரக் கோன் உயர்வான்

என்ற வாக்கை மெய்ப்பிக்கும் ஒரு அற்புதமான ரகம் இந்த சம்பா மோசனம் பாரம்பரிய நெல் ரகம்.

நீருக்கு மேல் நின்று விளையும் ரகம்

எப்பேர்பட்ட வெள்ளத்திலும் நீருக்கு மேல் நின்று விளையக்கூடிய ஒரு அற்புதமான ரகம். பொதுவாக எந்தவிதமான செலவும் இன்றி சிறந்த அறுவடையையும் நம்பிக்கையை மோசம் செய்யாது விளைச்சலையும் கொடுக்கக்கூடிய ரகம் இந்த சம்பா மோசனம்.

பெயர்காரணம் – ‘சம்பா மோசனம்’

சம்பா பட்டத்தில் மோசம் செய்யாமல் விளையக்கூடிய ஒரு ரகம் என்பதால் சம்பா மோசனம் என்ற ஒரு பெயர் வந்தது. ஆடி பட்டத்தில் விதை விதைக்க  160 -165 நாட்களில் உயர்ந்து வளரக் கூடிய ரகம். மடுமுழுங்கி, ஏரி நெல், புழுதிக்கால் போன்ற ரகங்களும் இந்த சம்பா மோசனம் ரகத்தை ஒட்டியதாகவே உள்ளது. இடத்திற்கு இடம் பயிரின் வளர்ச்சியில் பயிரின் வயதில் வித்தியாசம் மட்டுமே உள்ள ஒரு ஒத்த பாரம்பரிய ரகம்.

விதைப்பு – அறுவடை

கோடைகாலத்தில் குளத்தில் நீர் வற்றி இருக்கக்கூடிய காலங்களில் இந்த நெல் ரகத்தின் விதைகளை விதைத்துவிட்டால் மழைப்பொழிவு தொடங்கியதும் சிறிது ஈரப்பதம் கிடைத்தவுடன் நெல் முளைக்க தொடங்கிவிடும். மழைகாலத்தில் மழைப் பொலிவு அதிகரிக்க ஏரி, நீர் நிலைகளில் உள்ள நீரின் அளவு உயர உயர தாமரை தண்டு போல நெல் பயிர் மேலே வளர்ந்து கொண்டே இருக்கும். எப்பேர்பட்ட வெள்ளத்திலும், நீரிலும் இதனுடைய வளர்ச்சி நீருக்கு மேலே இருக்கும்.

நீர் நிலைகளின் புழுதியிலேயே இந்த சம்பா மோசனம் விதையை விதைப்பதால் சில இடங்களில் இதை புழுதிக்கால் என்றும் கூறுவதுண்டு. ஏரிகளின் பெரும்பாலும் இந்த விதைகளை விதைப்பதால் ஏரி நெல் என்றும், ஏரி, குளம் குட்டைக்கு மேல் அதாவது மடு என்னும் குளத்தை மூழ்கடித்து அதன் மேலே வளரக்கூடியது என்பதால் மடுமுழுங்கி என்றும் சில பகுதிகளில் கூறுவதுண்டு.

தாமரைத் தண்டு போல் நீரில் அளவிற்கு மேல் இதனுடைய வளர்ச்சி இருப்பதால் அறுவடைக்கு தயாராக இருக்கக்கூடிய நெல்லை கட்டுமரத்தில் சென்று அறுவடை செய்து மால் போட்டு இழுத்து வந்து தரையில் குத்தி காய வைக்கக் கூடிய ஒரு பழக்கமும் உண்டு. ஏரிப்பகுதிக்கு ஏற்ற ஒரு சிறந்த ரகம். இதனை சம்பா மோசனம் என்றும் மோசனம் சம்பா என்றும் கூறுவதுண்டு.

குறிப்பாக இந்த சம்பா மோசனம் ரகம் ஏழு அடிக்கு மேல் வளரக்கூடியது. விவசாயிகளுக்கு மோசம் செய்யாமல் மகசூலை அளிக்கக்கூடியது இந்த நெல் அரிசி மோட்டார் ரக சிகப்பு நிறத்தைக் கொண்டது.

சம்பா மோசனம் அரிசியின் பயன்கள்

இந்த நெல்லின் அரிசி சாதத்தை வடித்து உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், நீரிழிவு உட்பட பல வியாதிகளுக்கு சிறந்த ஒரு உணவாகவும் மருந்தாகவும் உள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து இந்த சம்பா மோசனம் அரிசியை எடுத்துக்கொள்ள விரைவில் அந்த தொந்தரவிலிருந்து வெளிவர உதவும். உடல்பருமன், இதய நோய் போன்ற பிரச்சனைகள் கல்லீரல் கணையத்தில் ஏற்படும் பதிப்புகளுக்கும் அவற்றில் வரக்கூடிய நோய்களையும் தடுக்கும் ஒரு சிறந்த சம்பா மோசனம்.

சம்பா மோசனம் அரிசியின் சத்துக்கள்

வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள், புரதச் சத்துக்கள், நார்ச்சத்துகள் என பல சத்துக்களை கொண்டிருக்கக் கூடிய ஒரு அற்புதமான ரகம்.

சம்பா மோசனம் அரிசியின் உணவுகள்

இட்லி, தோசை போன்ற பலகாரங்களுக்கு ஏற்ற ஒரு ரகம். குறிப்பாக சம்பா மோசன அரிசி அவல் தயாரிக்க உகந்தது. சிகப்பு நிற கைக்குத்தல் அரசியல் செய்யக் கூடிய இந்த சம்பா மோசனம் அவல் நல்ல ருசியாக இருக்கும். உயிர்சத்துக்களையும், தாது சத்துகளையும் அளிக்கொடுக்கும் அரிசி. நல்ல ஒரு ஆரோக்கியத்தையும் தெம்பையும் உடலுக்கு அளிக்கக் கூடிய அரிசி.

(1 vote)