ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் வாயிற்று வலி, அதிக உதிரப்போக்கு, சோம்பல், உடல் அசதி போன்றவற்றிற்கு மாமருந்து நம் பாரம்பரிய சிறு தானிய வகையான சாமை அரிசி.
பெண்களுக்கு மட்டுமில்லாது ஆண்களின் விந்து எண்ணிக்கையையும் அதிகரிக்க சாமை அரிசி உணவுகள் துணைசெய்கிறது. நார்சத்து அதிகம் கொண்ட இந்த சிறுதானியம் மலச்சிக்கலை நீக்குவதோடு சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு சக்கரையின் அளவை இரத்தத்தில் உடனடியாக ஏறாதவாறு பாதுகக்கவும் செய்கிறது.
சாமை அரிசி பயன்கள், நன்மைகளை தெரிந்துக்கொள்ள – சாமை அரிசி.
நார்ச்சத்துக்கள் மட்டுமில்லாமல் பல பல சத்துக்களும், பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சத்தான சாமை புட்டு. குழந்தைகளுக்கு கொழுக்கட்டைகளாக பிடித்து கொடுக்க விரும்பி உண்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற மாலை உணவு.
தேவையான பொருட்கள்
- 1 கப் சாமை
- ¾ கப் வெல்லம்
- 1 ஏலக்காய்
- 5 முந்திரி
- 5 திராட்சை
- ½ சிட்டிகை உப்பு
- தேங்காய் துருவல்
செய்முறை
முதலில் சாமை அரிசியை தண்ணீரில் நனைத்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
நன்றாக ஊறிய பிறகு நீரை வடித்து விடவேண்டும்.
சாமை அரிசி ஈரமாக இருக்க வேண்டும்.
ஆனால் தண்ணீர் கோர்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் சிறிது நேரம் உலர்த்தி பயன்படுத்தலாம்.
ஏலக்காய்,வெல்லம் இவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி,திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.
சாமை அரிசியை மிக்ஸியில் போட்டு ஈர மாவாக எடுத்துக்கொள்ளவும்.
பின் அதனை இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுத்துக்கொள்ளவும்.
ஆவி வெளியில் வந்த பின் சிறிது நேரம் கழித்து நல்ல வாசனை வரும்.
அப்போது சாமை மாவை இட்லிப் பாத்திரத்தில் இருந்து எடுத்து ஆற வைக்கவும்.
நன்றாக வெந்த மாவு கைகளில் ஒட்டாது.ஆறிய பிறகு துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கட்டிகளில்லாமல் மாவை உதிர்த்துக் கொள்ளவும்.
பின் இந்த மாவுடன் ஏலத்தூள், வெல்லம், முந்திரி, திராட்சை, தேங்காய்ப்பூ சேர்த்து நன்கு கிளறி சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.
பின் மீண்டும் இந்த சாமை புட்டு கொழுக்கட்டைகளை இட்லிப் பாத்திரத்தில் வைத்து அவிக்கவும்.
மாவு ஏற்கனவே வெந்து விட்டதால் இந்த முறை சீக்கிரமே ஆவி வந்துவிடும்.
சூடாக எடுத்து பரிமாறலாம்.
இதனை உதிரியாகவும் அவித்து உண்ணலாம்.
இப்போது நல்ல சுவையான, சத்தான, குழந்தைகளுக்குப் பிடித்தமான சாமை புட்டு தயார்.
சாமை புட்டு
தேவையான பொருட்கள்
- 1 கப் சாமை
- ¾ கப் வெல்லம்
- 1 ஏலக்காய்
- 5 முந்திரி
- 5 திராட்சை
- ½ சிட்டிகை உப்பு
- தேங்காய் துருவல்
செய்முறை
- முதலில் சாமை அரிசியை தண்ணீரில் நனைத்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- நன்றாக ஊறிய பிறகு நீரை வடித்து விடவேண்டும்.
- சாமை அரிசி ஈரமாக இருக்க வேண்டும்.
- ஆனால் தண்ணீர் கோர்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் சிறிது நேரம் உலர்த்தி பயன்படுத்தலாம்.
- ஏலக்காய்,வெல்லம் இவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி,திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.
- சாமை அரிசியை மிக்ஸியில் போட்டு ஈர மாவாக எடுத்துக்கொள்ளவும்.
- பின் அதனை இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுத்துக்கொள்ளவும்.
- ஆவி வெளியில் வந்த பின் சிறிது நேரம் கழித்து நல்ல வாசனை வரும்.
- அப்போது சாமை மாவை இட்லிப் பாத்திரத்தில் இருந்து எடுத்து ஆற வைக்கவும்.
- நன்றாக வெந்த மாவு கைகளில் ஒட்டாது.ஆறிய பிறகு துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கட்டிகளில்லாமல் மாவை உதிர்த்துக் கொள்ளவும்.
- பின் இந்த மாவுடன் ஏலத்தூள், வெல்லம், முந்திரி, திராட்சை, தேங்காய்ப்பூ சேர்த்து நன்கு கிளறி சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.
- பின் மீண்டும் இந்த சாமை புட்டு கொழுக்கட்டைகளை இட்லிப் பாத்திரத்தில் வைத்து அவிக்கவும்.
- மாவு ஏற்கனவே வெந்து விட்டதால் இந்த முறை சீக்கிரமே ஆவி வந்துவிடும்.
- சூடாக எடுத்து பரிமாறலாம்.
- இதனை உதிரியாகவும் அவித்து உண்ணலாம்.
- இப்போது நல்ல சுவையான, சத்தான, குழந்தைகளுக்குப் பிடித்தமான சாமை புட்டு தயார்.