சாமை பிரியாணி

ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் வாயிற்று வலி, அதிக உதிரப்போக்கு, சோம்பல், உடல் அசதி போன்றவற்றிற்கு மாமருந்து நம் பாரம்பரிய சிறு தானிய வகையான சாமை அரிசி. 

வைட்டமின் பி சத்து குறிப்பாக நியாசின், B6, போலிக் அமிலம் போன்றவையும் டிரிப்டோபென், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகமும்  சீராக உள்ளது.

அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சீராக கொண்டுள்ள இந்த சாமை அரிசி கர்ப்பப்பையை பலப்படுத்துவதோடு வளர்சிதை மாற்றதையும் சீராக்கி கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.

samai rice, samai arisi, millet in tamil, samai benefits in tamil, samai health benefits and medicinal uses, little millet

தேவையான பொருட்கள்

  • 2 கப் சாமை
  • ¼ கப் கேரட்
  • ¼ கப் பீன்ஸ்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4 வரமிளகாய் (காரத்திற்கேற்ப)
  • சிறு துண்டு இஞ்சி
  • 6 பற்கள் பூண்டு
  • 1 மேசைக்கரண்டி சோம்பு
  • சிறிது பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • தாளிக்க தேவையான அளவு செக்கு கடலை எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
  • காய்கறிகளைச் சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். 
  • மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, ஏலக்காய், அரை மேசைக்கரண்டி சோம்பு, கிராம்பு, பட்டை ஆகியவற்றைப் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். 
  • நறுக்கி வைத்துள்ள தக்காளியில் பாதியளவு சேர்த்து அரைத்தால் விழுது நன்றாக இருக்கும்.
  • சாமையை நன்றாக அலசி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  • பின் 4 கப் தண்ணீர் ஊற்றி ஊரவைக்கவும். (ஒரு கப் சாமை 2 கப் தண்ணீர் ஊற்றவும் (1:2)).
  • ஒரு மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு பொரியவிட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 
  • அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின்னர் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும். 
  • பிறகு பாதியளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து காய்கறிகளை வேக விடவும்.
  • காய்கறிகள் அரை பதமாக வெந்ததும் சாமையைப் சேர்த்து தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட்டு வைக்கவும்.
  • கொதி வந்தவுடன் கலவையை நன்றாக கிளறி விட்டு, மூடி சிறு தீயில் அடுப்பை வைக்கவும்.
  • ஏழு முதல் பத்துநிமிடத்தில் சாமையில் உள்ள நீரைபொருத்து நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து மூடிவைக்கவும்.
  • பத்து நிமிடத்திற்குப் பின் வெந்த சாமை பிரியாணியை நன்றாக கிளறி விடவும். 
  • சூடான சாமை பிரியாணி ரெடி. 
  • மல்லி, புதினா போட்டு அலங்கரித்து ரைத்தாவுடன் பரிமாறவும்.

சாமை பிரியாணி



ஊட்டச்சத்துக்களை சீராக கொண்டுள்ள இந்த சாமை அரிசி கர்ப்பப்பையை பலப்படுத்துவதோடு வளர்சிதை மாற்றதையும் சீராக்கும். சுவையான சாமை பிரியாணி. 


⏲️ ஆயத்த நேரம்
30 mins

⏲️ சமைக்கும் நேரம்
20 mins

🍴 பரிமாறும் அளவு
4

🍲 உணவு
மதியம்


தேவையான பொருட்கள்
  • 2 கப் சாமை
  • ¼ கப் கேரட்
  • ¼ கப் பீன்ஸ்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4 வரமிளகாய் (காரத்திற்கேற்ப)
  • சிறு துண்டு இஞ்சி
  • 6 பற்கள் பூண்டு
  • 1 மேசைக்கரண்டி சோம்பு
  • சிறிது பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • தாளிக்க தேவையான அளவு செக்கு கடலை எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
செய்முறை
  1. பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
  2. காய்கறிகளைச் சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். 
  3. மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, ஏலக்காய், அரை மேசைக்கரண்டி சோம்பு, கிராம்பு, பட்டை ஆகியவற்றைப் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். 
  4. நறுக்கி வைத்துள்ள தக்காளியில் பாதியளவு சேர்த்து அரைத்தால் விழுது நன்றாக இருக்கும்.
  5. சாமையை நன்றாக அலசி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  6. பின் 4 கப் தண்ணீர் ஊற்றி ஊரவைக்கவும். (ஒரு கப் சாமை 2 கப் தண்ணீர் ஊற்றவும் (1:2)).
  7. ஒரு மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு பொரியவிட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  8. வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 
  9. அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின்னர் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும். 
  10. பிறகு பாதியளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து காய்கறிகளை வேக விடவும்.
  11. காய்கறிகள் அரை பதமாக வெந்ததும் சாமையைப் சேர்த்து தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட்டு வைக்கவும்.
  12. கொதி வந்தவுடன் கலவையை நன்றாக கிளறி விட்டு, மூடி சிறு தீயில் அடுப்பை வைக்கவும்.
  13. ஏழு முதல் பத்துநிமிடத்தில் சாமையில் உள்ள நீரைபொருத்து நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து மூடிவைக்கவும்.
  14. பத்து நிமிடத்திற்குப் பின் வெந்த சாமை பிரியாணியை நன்றாக கிளறி விடவும். 
  15. சூடான சாமை பிரியாணி ரெடி. 
  16. மல்லி, புதினா போட்டு அலங்கரித்து ரைத்தாவுடன் பரிமாறவும்.