ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் வாயிற்று வலி, அதிக உதிரப்போக்கு, சோம்பல், உடல் அசதி போன்றவற்றிற்கு மாமருந்து நம் பாரம்பரிய சிறு தானிய வகையான சாமை அரிசி.
பெண்களுக்கு மட்டுமில்லாது ஆண்களின் விந்து எண்ணிக்கையையும் அதிகரிக்க சாமை அரிசி உணவுகள் துணைசெய்கிறது. நார்சத்து அதிகம் கொண்ட இந்த சிறுதானியம் மலச்சிக்கலை நீக்குவதோடு சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு சக்கரையின் அளவை இரத்தத்தில் உடனடியாக ஏறாதவாறு பாதுகக்கவும் செய்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி, மாதவிடாய் தொந்தரவுகள், உடல் வலி, அடி வயிற்றுவலி போன்ற பல பல தொந்தரவுகளுக்கு சிறந்த உணவு. வாரம் ஒரு முறை உட்கொள்ள எலும்பு பலம் கூடும். கருப்பை பலப்படும்.
சாமை அரிசி பயன்கள், நன்மைகளை தெரிந்துக்கொள்ள – சாமை அரிசி.
தேவையான பொருட்கள்
- ½ கப் சாமை அரிசி
- 4 ஸ்பூன் கருப்பு உளுந்து
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- ¼ ஸ்பூன் சீரகம்
- 2 முழுப்பூண்டு
- ½ கப் தேங்காய் துருவல்
- உப்பு
செய்முறை
முதலில் கருப்பு உளுந்தை லேசாக வறுக்கவும்.
பின் அதனை ஒரு மண்சட்டியில் 3 கப் நீரில் கொதிக்கவிடவும்.
சிறிது வெந்ததும் அதனுடன் சாமையரிசி, பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்த்து குழைய வேகவிடவும்.
நன்கு கொதித்து அனைத்தும் வெந்தவுடன் சிறிது உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.
சுவையான சாமை உளுந்தங்கஞ்சி தயார்.
பெண்களுக்கு ஏற்ற சிறந்த உணவு.
மாதவிடாய் தொந்தரவுகள், வயிற்று வலி நீங்கும். எள்ளுத்துவையலுடன் சுவையாக இருக்கும்.
சாமை அரிசி உளுந்தங்கஞ்சி
தேவையான பொருட்கள்
- ½ கப் சாமையரிசி
- 4 ஸ்பூன் கருப்பு உளுந்து
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- ¼ ஸ்பூன் சீரகம்
- 2 முழுப்பூண்டு
- ½ கப் தேங்காய் துருவல்
- உப்பு
செய்முறை
- முதலில் கருப்பு உளுந்தை லேசாக வறுக்கவும்.
- பின் அதனை ஒரு மண்சட்டியில் 3 கப் நீரில் கொதிக்கவிடவும்.
- சிறிது வெந்ததும் அதனுடன் சாமையரிசி, பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்த்து குழைய வேகவிடவும்.
- நன்கு கொதித்து அனைத்தும் வெந்தவுடன் சிறிது உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.
- சுவையான சாமை உளுந்தங்கஞ்சி தயார்.
- பெண்களுக்கு ஏற்ற சிறந்த உணவு.
- மாதவிடாய் தொந்தரவுகள், வயிற்று வலி நீங்கும். எள்ளுத்துவையலுடன் சுவையாக இருக்கும்.