salt, sea sat, herbal salt, mooligai uppu, natural salt, plant salt

உப்புக்கு பதிலாக இவற்றை பயன்படுத்தலாமே

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’
”உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான்’

இப்படி பல பல வழக்கு மொழிகள் உப்பைப் பற்றி இருந்தாலும்.. அன்றாடம் உணவு செரிமானத்திற்கு உப்பு அவசியமாகிறது. அதுவே அளவுக்கு அதிகமாகும் போது உடலுக்கு நச்சாகவும் மாறுகிறது.

உண்ணும் உணவில் சுவையை வெளிப்படுத்த சேர்க்கப்படும் உப்பின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அதிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, முக்கியக் காரணம், அதில் உப்பு சேர்த்திருப்பதாலேயே தான்.

‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்று சொன்னால், உடனே உப்பு இல்லாமல் எந்த உணவையும் சாப்பிட முடியாது என்று நினைக்க வேண்டாம். உப்பு அதிகம் சேர்த்தால், நம் உடலைத் தான் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் அதை அதிகம் உணவில் சேர்த்தால், உடலில் பலவகையான நோய்கள் தான் வரும். அதுவும் ஹைப்பர் தைராய்டிசம் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை அனைத்தும் உருவாவதற்கு உப்பே காரணம் ஆகும். இதற்கு காரணம் உப்பில் சோடியம் அதிகமாக இருப்பது. ஆனால் இந்த சோடியம் உப்பில் மட்டுமில்லை, அன்றாட சமையலில் பயன்படுத்தும் சில மூலிகைப் பொருட்களிலும் உள்ளது.

salt, sea sat, herbal salt, mooligai uppu, natural salt, plant salt

மேலும் உணவுகளில் போதிய அளவு சோடியம் இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய சோடியத்தை உப்பிலிருந்து மட்டும் தான் பெற வேண்டுமென்பதில்லை, உணவுகளில் சுவைக்கும், மணத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு சில மூலிகைகளிலும் சோடியம் உள்ளது. இந்த மூலிகைப் பொருட்கள் சுவை மற்றும் மணம் கொடுப்பதோடு, மருத்துவ குணங்களும் வாய்ந்தது. இதனால் உடலில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும். இப்போது அத்தகைய உப்பிற்கு பதிலாக உணவிற்கு சுவையை தரும் ஆரோக்கியமான மூலிகைப் பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம்.

அதுமட்டுமல்ல சாதாரணமாக கிடைக்கும் உப்பினை எவ்வாறு பயன்படுத்துவது என தெரிந்து கொள்ள இந்த காணொளியை பார்க்கவும் – உப்பு

இத்தகைய மூலிகைப் பொருட்களால், உணவானது சுவையுடன் இருப்பதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே குறைந்த அளவில் சோடியம் இருக்கும் மூலிகைப் பொருட்களை உணவுகளில் பயன்படுத்தி, ஆரோக்கியத்தையும், சுவையையும் பெறுவோம்.

பட்டை

மசாலாப் பொருட்களில் ஒன்றாக பயன்படும் பட்டை, இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஆசியாவின் பல இடங்களில் சமைக்கப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உணவுக்கு சுவை கிடைப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க செய்யும்.

ஏலக்காய்

நிறைய மக்கள் ஏலக்காயை வைத்து டீ போட்டு குடிப்பார்கள். அதிலும் ஏலக்காய் போட்டு சமைத்தால், உணவானது மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, வித்தியாசமான சுவையும் கிடைக்கும். குறிப்பாக இதனை சீரகம் மற்றும் மல்லியுடன் சேர்த்து சமையலில் சேர்க்கும் போது, இதன் சுவை மற்றும் மணத்திற்கு அளவே இல்லை.

பேசில்

இந்தியாவில் சமைக்கும் போது பயன்படுத்தும் மூலிகைகளில் பேசில் இலையும் ஒன்று. இந்த இலை சற்று காரமான சுவையும் மற்றும் லேசான இனிப்பு சுவையையும் உடையது. இது வெறும் மருத்துவப் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுவதோடு, உப்புக்கு பதிலாக உணவுகளில் சிறந்த சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய் வெறும் காரத்திற்காக மட்டும் பயன்படுவதில்லை. இது உணவில் காரத்துடன், ஒரு நல்ல சுவை தரும் பொருளாகவும் பயன்படுகிறது

பிரியாணி இலை

பொதுவாக பிரியாணி இலை பிரியாணிகளில் மட்டும் தான் சுவைக்காக பயன்படுத்துவோம். ஆனால் அத்தகைய பிரியாணி இலை சற்று இனிப்பு சுவையுடன், மிகுந்த மணமுடன் இருக்கும். எனவே தான், இதனை உணவுகளில் சேர்த்தால், உணவின் சுவை சூப்பராக உள்ளது.

பூண்டு பொடி

உணவில் பூண்டை சுவைக்கு மட்டும் பயன்படுத்துவதோடு, அதிலுள்ள மருத்துவ குணம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்பதால் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

மிளகு தூள்

மிளகு தூளுக்கும் உப்புக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை. எப்படி உப்பை உணவில் சேர்க்கிறோமோ, அதேப் போல் தான் மிளகு தூளையும் சேர்க்கிறோம். உப்பில்லாமல், வெறும் மிளகுத் தூளை மட்டும் சேர்த்தாலும், உணவில் சூப்பரான சுவையைப் பெறலாம்.

வெங்காயப் பொடி

காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் மிகவும் காரமான சுவையுடையது. எனவே இதனை உணவில் சரியான அளவில் சேர்த்தால், சரியான ருசியைப் பெறலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றிலும் சூப்பரான சுவை உள்ளது. அதிலும் நல்ல ஃப்ரஷ்ஷான எலுமிச்சை பழத்தை நறுக்கிப் பயன்படுத்துவது சிறந்த ருசியைத் தரும். அதுவே காய்ந்த எலுமிச்சையை பயன்படுத்தினால், பின் உணவில் சுவையே மாறிவிடும்.

(3 votes)