பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றானது இந்த சேலம் சன்னா அரிசி. இது வெள்ளை நிற அரிசி வகையை சேர்ந்தது. அன்றாடம் மதிய உணவிற்கு ஏற்ற சன்ன ரக அரிசி.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் இந்த அரிசி ஒட்டுரக அரிசிக்கு சிறந்த மாற்றாக இருக்கும். நல்ல சுவையையும் உடலுக்கு அவசியமான சில சத்துக்களையும் அளிக்கக் கூடிய அரிசி. சேலம் மாவட்டத்தை மையமாக கொண்டு விளையும் சன்ன ரக பாரம்பரிய அரிசி ரகம் இந்த சேலம் சன்னா அரிசி. ஜீரண மண்டலத்தை பலப்படுத்தும் தன்மை கொண்டது. சதை, எலும்புகள், மூட்டுகளுக்கு சிறந்தது.
பொதுவாக இந்த அரிசியை எந்த இரசாயனகளும் பூச்சி கொல்லிகளும் இன்றி விளைவிக்க முடியும். இயற்கை முறையிலேயே நல்ல விளைச்சலை அளிக்கொடுக்கும் அற்புதமான ரகம். ஆண்கள் பெண்களுக்கு வரக்கூடிய ஹார்மோன் சார்ந்த தொந்தரவுகளுக்கு எந்த ரசாயனமும் இன்றி விளையும் இந்த சேலம் சன்னா அரிசி சிறந்த பலனை அளிக்கும். உடல் கழிவுகளை நீக்க உதவும்.
இந்த சேலம் சன்னா அரிசி சாதம் நல்ல சுவையாக இருக்கும். இனிப்பு பொங்கலுக்கு உகந்த அரிசி. அதிலும் இந்த அரிசியில் தயாரிக்கப்படும் பழைய சாதம் நல்ல மணமாக இருக்கும். உடலுக்கு தேவையான பல வைட்டமின் சத்துகளையும், நுண்ணூட்ட சத்துக்களையும் இந்த பழயமுது (பழஞ் சோறு) கொண்டிருக்கும்.
சேலம் சன்னா அரிசி நெல் சம்பா பட்டத்தில் விளையக்கூடியது. நூற்றி நாற்பது நாட்களில் விளையும் இந்த அரிசி ஐந்தடி வரை வளரும் தன்மை கொண்டது.
குழந்தையின்மை, உடல் பருமன், நீரிழிவு போன்ற தொந்தரவு உள்ளவர்களுக்கு சிறந்த அரிசி. சேலம் சன்னா அரிசி பச்சை அரிசியாகவும், புழுங்கல் அரிசியாகவும் இந்த சந்தையில் பெறலாம். இந்த அரிசியை சமைப்பதற்கு முன் இருபது நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு பின் வடித்து உண்பது சிறந்தது.
மதிய உணவிற்கு சாதமாக மட்டுமல்லாமல் புலாவ், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதம் தயாரித்து உண்ணவும் ஏற்றதாக இருக்கும். பலகாரங்கள் இட்லி, தோசை போன்றவற்றிற்கு சிறந்த அரிசி. நம்மூர் இட்லி போல் மங்களூரில் தயாரிக்கப்படும் ‘sanna’ என்ற மங்களூர் இட்லி உணவையும் தயாரிக்க இந்த அரிசி பயன்படும்.
I need sorna masuri rice