Salabhasana yoga in tamil, Locust pose, Grasshopper pose, prone back-bending asana

சலபாசனம் / Grasshopper Pose / Locust Pose

பூச்சிகளுக்கு முன் கால்களை விட பின் கால்கள் பலமாகவும், முன் பாய்வதற்கு ஏற்றார்ப்போலும் இருக்கும். இவ்வாறு நமது உடலைத் தாங்கும் கால்கள் பலமாக இருக்க செய்யப்படும் ஆசனம் சலபாசனம். சலபா / சுலபம் என்பது வெட்டுக் கிளியைக் குறிக்கும். பின் கால்களை தூக்கி கால்களையும் அதன் பகுதிகளையும் ஆரோக்கியமாக்கும் ஆசனம்.

சலபாசனா செய்முறை

தரை விரிப்பில் குப்புறப் படுத்து அதாவது மார்புப் பகுதி தரையில் படுமாறு படுத்து, இருகைகளையும் உடலோடு ஒத்திவைக்கலாம் அல்லது இரு கைகளையும் தொடைக்கு அடியில் மூடியவாறு வைக்க வேண்டும். பின் முகத்தையும், இடுப்பிற்கு கீழ் பகுதியையும் மேல் தூக்க / உயர்த்த வேண்டும். இந்த நிலையில் வயிறு மட்டும் தரையில் இருக்கும். ஆவரவருக்கு எவ்வளவு முடியுமோ ஆவளவு உயர்த்தலாம். ஓரிரு வினாடிக்குப் பின் மூச்சை வெளி விட்டுக்கொண்டே இயல்பான நிலைக்கு மெல்ல கொண்டு வர வேண்டும்.

Salabhasana yoga in tamil, Locust pose,  Grasshopper pose, prone back-bending asana

சலபாசனா பயன்கள்

  • உடல், மனம் மற்றும் சிந்தனை தெளிவாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். தீய எண்ணங்கள் மறையும், புது ஆற்றல் மற்றும் தெம்பை உடல் அனுபவிக்கும்.
  • வயிறுப்பகுதி பலப்படும்.
  • இடுப்பு வலி, முதுகுவலி, தோல் பட்டை தொந்தரவுகள் வலிகள் மறையும்.

  • நரம்பு தொந்தரவுகள் மறையும்
  • மலச்சிக்கல் தீரும்.
  • ஜீரண சக்தி அதிகரிக்கும்.
  • உடல் பருமன் குறையும்.
  • சிறுநீரக கோளாறுகள் வராமல் பாதுகாக்கலாம்.
  • மூல நோய் மறையும்.
(1 vote)