குங்குமப்பூ பயன்களும் மருத்துவமும்

குங்குமப்பூ என்றதும் கருவுற்றிருக்கும் பெண்களுக்கானது மட்டுமே இந்த குங்குமப்பூ என பலர் நினைப்பதுண்டு. குங்குமப்பூ பிறக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் மட்டுமல்ல அனைவருக்குமான ஒரு அற்புத உணவு. குங்குமப்பூ பல பயன்களையும் மருத்துவகுணங்களையும் கொண்டுள்ளது.

சுகப்பிரசவத்திற்கு

சுகப்பிரசவமாக தினமும் இரவில் காய்ச்சிய பசும் பாலில் குங்குமப்பூ கலந்து குடிக்கலாம்.

கர்ப்பம் வெளிப்பட

கர்ப்பம் வெளிப்படாமல் அவதிப்படுபவர்கள் சோம்புக் கஷாயத்தில் கொஞ்சம் குங்குமப்பூ கரைத்துக் கொடுக்க விரைவில் வெளிப்படும்.

குங்குமப்பூ குடிநீர்

கண் நோய், தலைவலி, கபநோய், சூலை, சுரம், விந்தணு குறைபாடு, தாகம், மேகநீர், பித்தம், வாந்தி, வாயினிப்பு போன்ற தொந்தரவுகளை போக்கும் அற்புத மருந்து குங்குமப்பூ.

ஒரு பாத்திரத்தில் ஓரிரு குங்குமப்பூக்களை எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கப் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு குங்குமப்பூவை நீரில் ஊறப் போட்டு காலை மாலை என இரு வேளை குடித்து வர கண் நோய் தொடங்கி வாயினிப்பு தொந்தரவு வரை வரும் பிரச்சனைகளுக்கு விரைவில் குணம் தெரியும்.

வாய் நாற்றம் / செரிமான தொந்தரவுகள்

வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூ, ரோஜா இதழ்கள் சேர்த்துச் சாப்பிட்டு வர விரைவில் பலன் தெரியும். சரும அழகையும் அதிகரிக்கும்.

மர்ம உறுப்பு இரணங்களுக்கு

ஆண் குறி, பெண் குறி, ஆசனவாய் முதலிய மர்ம உறுப்புகளில் ஏற்படும் இரணங்களுக்கு குங்குமப்பூவைத் தேனில் விட்டரைத்துத் தடவி வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

குடல் புண் ஆற

வயிற்றில் வரும் அனைத்து விதமான குடல் புண் மற்றும் மது அருந்தி குடலில் ஏற்பட்ட புண்ணாயினும் அதற்கு காய்ச்சிய பசும் பாலில் சுத்தமான குங்குமப்பூ கலந்து தினமும் பருகுவது நல்ல பலனை அளிக்கும். இந்த சமயத்தில் கார உணவுகளை நீக்கி, இரவு கண் விழிப்பைக் குறைத்தால் விரைவில் குணம் தெரியும்.

கண்ணீர் ஒழுகும் பிரச்சினை / கண் ஏற்படும் நோய்களுக்கு

குங்குமப்பூவுடன் தாய்ப்பால் விட்டரைத்து இரண்டு சொட்டு கண்களில் விட உடனே பலன் தெரியும். கண்ணில் ஏற்படும் பல நோய்கள் மறையும்.

(10 votes)