ரோஜா குல்கந்து

தேனும் ரோஜா இதழ்களும் கொண்டு தயாரிக்கப்படும் குல்கந்து அதிக சத்துகளையும் நன்மைகளையும் கொண்டது. உடலுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் தேன் மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களை போக்கும் அற்புதமான உணவு. அன்றாடம் தேனை எடுத்துக்கொள்வதால் உடல் நோய்கள் அகலும், நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். மேலும் தேனைப்பற்றியும், அதன் வகைகள், பயன்களை தெரிந்துக் கொள்ள தேன் என்ற பகுதியில் இணையவும். உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு உற்சாகத்தை அளிக்கும் அற்புதமான மலர் ரோஜா. ரோஜா பூக்களின் பயன்களையும், நன்மைகளையும் தெரிந்துக்கொள்ள ரோஜா பூக்களின் பயன்கள், மருத்துவகுணங்கள் என்ற பகுதியில் இணையவும்.

இந்த ரோஜா இதழ்களையும், தேனையும் மட்டும் பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய ரோஜா குல்கந்து அதிக வீரியமும், ஆற்றலையும் கொண்டது. அதிக சத்துக்கள் கொண்ட இந்த ரோஜா குல்கந்தை வீட்டிலேயே மிக எளிமையாக தயாரித்து பயன்படுத்துவது சிறந்தது. பொதுவாக சந்தைகளில் கிடைக்கும் குல்கந்தில் இரசாயனங்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை சர்க்கரை போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும் அதனால் அவற்றை தவிர்த்து நாமே வீட்டில் மிக எளிமையாக இந்த இரண்டே பொருட்களைக் கொண்டு தயாரித்து பயன்படுத்துவது சிறந்தது.

ரோஜா குல்கந்து நன்மைகள்

  • மூப்பை தடுக்கும், இளமையை பாதுகாக்கும்.
  • பெண்களுக்கு ஏற்பாடும் மாதவிடாய் குறைபாடுகளை போக்கும்.
  • கருப்பை தொந்தரவுகளுக்கு சிறந்தது.
  • கர்ப்பிணிகளுக்கு சிறந்தது.
  • அண்மையை அதிகரிக்கும்.
  • குழந்தையின்மையை போக்கும்.

  • இருதயத்தை பலப்படுத்தும்.
  • உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
  • அஜீரணம், செரிமானமின்மைக்கு சிறந்தது.
  • வாய்ப்புண் வயிற்றுப்புண் போக்கும்.
  • உடல் துர்நாற்றம் அகலும்.
  • மலச்சிக்கல் அகலும்.

ரோஜா குல்கந்து செய்வது எப்படி?

https://www.youtube.com/watch?v=r9vXPIg2f5E

ரோஜா பூவின் பயன்கள்

https://www.youtube.com/watch?v=NRjrLexXLM4
(2 votes)