பேய் பீர்க்கங்காய்

பேய் பீர்க்கங்காய்

அனைத்து இடங்களிலும் சாதாரணமாக சாலை ஓரங்களில், வேலிகளில் பார்க்கக்கூடிய கொடி இந்த பேய் பீர்க்கன். பீர்க்கங்காய் இனத்தை சேர்ந்த இது உணவாக பயன்படுவதில்லை. கிருமி, காய்ச்சல், காமாலையை குணமாகும் சிறந்த காய். இதனை குளிக்க பொதுவாக பயன்படுத்தும் பழக்கம் நமது தமிழகத்தில் உள்ளது. நல்ல கசப்பு சுவை கொண்ட இதன் நார்கள் தோலில் உள்ள அழுக்கு போக்குவதுடன் சருமத்தில் ஏற்படும் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. இதனைக்கொண்டு குளிக்க சரும நோய்கள், கிருமிகளால் ஏற்பட்டிருக்கும் பதிப்புகள் அகலும். சிறந்த கிருமிநாசினியான இது கல்லீரல் தொந்தரவுகளுக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கிறது.