knee pain, mootu vali, arthitis, mudakku vantham, joint pain food remedy in tamil, health n organics

வாத நோய் தீர சில வழிகள்

இரத்த ஓட்டம் சீராக இல்லாதது, மூட்டுகளில் வரும் தொந்தரவுகள், நரம்பு இயக்கத்தில் வரும் பாதிப்புகள், சீரான உணவு செரிமானமின்மை என பல காரணங்களால் வரும் தொந்தரவு வாத நோய். இந்த நோயால் அவதிப்படுபவர்களுக்குத் தான் தெரியும் அதன் வலியும் வேதனையும். மூட்டுவலி வர பல காரணங்கள் இருந்தாலும் சிலவற்றை மூட்டுவலி வர பல காரணங்கள் என்ற பகுதியிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

வாத நோய் உடலினுள் வளர்ந்தாலும் பொதுவாக அறிகுறிகளால் வெளிபட பல ஆண்டுகளாகும். அதனால் இதற்கு முறைப்படி பலவழிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க இதன் தீவிரத்தை குறைக்க முடியும். மனம் தளராமல் ஆரோக்கியமான மன நிலையுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், நல்ல புரதம் கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ள இந்த நோயிலிருந்து வெளிவரலாம்.

knee pain, mootu vali, arthitis, mudakku vantham, joint pain food remedy in tamil, health n organics
  • சாலை ஓரங்களில், புதர்களில் கிடைக்கும் முடக்கறுத்தான் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுத்துவர அல்லது கட்டி வர வாதப்பிடிப்பு வீக்கம் குறையும். முடக்கறுத்தான் இலையை தோசையாகவும், அடையாகவும் செய்து உண்ணலாம்.
  • வாதநாராயண இலையை சாறு எடுத்து அன்றாடம் சிறிதளவு என தொடர்ந்து பருகிவர வீக்கங்கள், குடைச்சலால் வரும் வலிகள் தீரும்.
  • நொச்சியிலைக் குளியல் வாத வீக்கத்திற்கு நல்ல பலனை அளிக்கும். நொச்சி இலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதனில் குளிக்க வாதவலியும் உடல் வலியும் மறையும். நொச்சி தைலமும் இதற்கு பலனளிக்கும்.
  • புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கும் குப்பைமேனி இலைசாறு வாதத்திற்கும் நல்ல பலனை அளிக்கும். அன்றாடம் பத்து இலைகளை எடுத்து அதனைக் கசக்கி அதன் சாறை பருகலாம்.
  • வீட்டிலிருக்கும் வெங்காய சாறு வாதத்தால் வரும் மூட்டு வலிக்கு நல்ல பலனை அளிக்கும். வெங்காய சாறை கடுகு எண்ணெயில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவ விரைவில் வலி நீங்கும்.
  • வேப்பெண்ணைக் கொண்டு தலைக்கு குளித்து வர வாத வலிகள் குறையும்.
  • கட்டுக் கொடி இலை, மிளகு, சுக்கு ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி பருகிவர வாத நோய் விரைவில் தீரும்.
  • வீக்கங்கள் பலவகை உள்ளது என்றாலும் வாதத்தால் வரும் வீக்கம் அதிக வலியையும் வேதனையையும் அளிக்கும். பெரும்பாலும் பலருக்கும் காலையில் இந்த வீக்கங்கள் அதிக தொந்தரவை அளிக்கும். இதற்கு ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி இளம் சூட்டில் கட்ட நல்ல பலனைப் பெறலாம்.
  • முடக்கு வாதத்திற்கு பாதாளமூலியை முள் நீக்கி விளக்கெண்ணையில் வாட்டி கட்டுவதாலும் ஒத்தடம் கொடுப்பதாலும் படிப்படியாக தொந்தரவு தீரும்.
  • ஆசனம், யோக ஆகியவற்றை தொடர்ந்து செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

வாத நோய் – தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • வாத நோய் உள்ளவர்கள் பலாப்பழத்தை சற்று தவிர்ப்பது சிறந்தது.
  • இரசாயனங்கள் கொண்டு பதப்படுத்தப் பட்ட உணவுகள், அதிக உப்பு, வெள்ளை சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • கடலை மாவு, கடலைப் பருப்பு ஆகியவற்றையும், அதிக புரத சத்து கொண்ட உணவுகளையும் தவிர்ப்பது சிறந்தது.
  • செரிமானத்தை தாமதப்படுத்தும் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது அவசியமானது.
(4 votes)