பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு –
- வெளியே இருக்கும் உமி (Husk)
- உள்ளே இருக்கும் தவிடு (Bran)
- கரு (Embryo)
- கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch)
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் உள்ளன. பட்டை தீட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் நமக்கு கிடைக்கும் வெள்ளை சக்கை அரிசியையே இன்று பெரும்பாலானவர்கள் உட்கொள்கின்றனர்.
அதாவது சத்துக்களை நீக்கிவிட்டு அதாவது வெளிப்பகுதியை நீக்கிவிட்டு மாவுச்சத்துக்கள் மட்டுமே நிறைந்த உட்பகுதியான சக்கை அரிசியை உட்கொள்கின்றனர். இதனால் பல பல நோய்களும், உடல் உபாதைகளும் ஏற்படுகிறது.
இவற்றில் சிவப்பு நெல், சிவப்பு அரிசி இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுகிறது. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது.
சிவப்பு அரிசி பயன்பாடு தற்பொழுது குறைந்ததற்கான காரணம் என்ன?
சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும், இடாவிட்டாலும், பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை கொண்டது. பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் வெளிநாட்டவர்கள் அழைத்தார்கள்.
‘பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.
இந்த ரக பாரம்பரிய அரிசிகளுக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை, உரம், பூச்சிக்கொல்லிகள் தேவையில்லை, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை கொண்ட அரிசி, அபாரமான சுவையையும் சத்துக்களும் நிறைந்த அரிசியாகவும் இந்த சிவப்பு அரிசி உள்ளது.
Interesting. Very useful information. Thnk U
thnk u