கார் அரிசி இட்லி / சிகப்பரிசி இட்லி

சிகப்பரிசியான பாரம்பரிய கார் அரிசி பல பல மருத்துவகுணம் கொண்டது. நார்ச்சத்து, சிறிது புரதம், பல தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்பு சத்தும் நிறைந்ததாக இருக்கிறது. 

கார் அரிசி என்றவுடன் புட்டு அரிசி என்ற பொதுக்கருத்து உள்ளது. புட்டிற்கு மட்டுமல்லாது மற்ற அனைத்து உணவினையும் இந்த கார் அரிசியில் தயாரிக்கலாம்.

கார் அரிசியின் பயன்கள், நன்மைகள் மற்றும் சத்துக்கள்…

தேவையான பொருட்கள்

  • 3 கப் கார் அரிசி
  • 1 கப் உளுந்தம் பருப்பு
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • உப்பு

செய்முறை

  • கார் அரிசியை எந்த கப்பில் அளக்கிறீர்களோ, அதே காப்பில் கட்டாயம் உளுந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • முதலில் கார் அரிசியை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவவேண்டும்.
  • இரண்டு முதல் ஆறு மணி நேரம் கார் அரிசியை ஊறவைக்கவேண்டும்.
  • வெந்தயத்தை ஊறவைக்கவும்.
  • ஒரு மணி நேரம் உளுந்தை ஊறவைக்கவும்.
  • கிரைண்டரில் உளுந்தை ஆட்டும்பொழுது அவ்வப்பொழுது மாவை தண்ணீர் தெளித்து தள்ளிவிட்டு ஆட்டவேண்டும்.
  • உளுந்து நன்கு மைய பொங்கி அரைத்த பின் மாவினை அள்ளிவிட வேண்டும்.
  • பின் கார் அரிசியை போட்டு நன்றாக ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • உளுந்தையும் கார் அரிசி மாவையும் ஒன்றாக போட்டு உங்கள் கைகளால் கரைக்க வேண்டும்.
  • கைகளால் மாவு கரைக்கும் போது தான், மாவு நன்றாக புளிக்கும்.
  • உப்பு போட்டு கரைத்த மாவை 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.
  • எட்டு மணி நேரம் கழித்து நன்கு கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேகவிடவும்.

கார் அரிசி இட்லி / சிகப்பரிசி இட்லி

சிகப்பரிசியான பாரம்பரிய கார் அரிசி பல பல மருத்துவகுணம் கொண்டது. நார்ச்சத்து, சிறிது புரதம், பல தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்பு சத்தும் நிறைந்ததாக இருக்கிறது. 
கார் அரிசி என்றவுடன் புட்டு அரிசி என்ற பொதுக்கருத்து உள்ளது. புட்டிற்கு மட்டுமல்லாது மற்ற அனைத்து உணவினையும் இந்த கார் அரிசியில் தயாரிக்கலாம்.
ஆயத்த நேரம் : – 15 hours
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 15 hours 10 minutes