சமீப நூற்றாண்டுகளில் தான் மிளகாய் நம் நாட்டிற்கு அறிமுகமானது. நம் முன்னோர்கள் காரத்திற்கு மிளகையே பயன்படுத்தினார். மிளகாயின் காரத்தை நம் முன்னோர்கள் உபயோகித்ததே இல்லை. மிளகு போன்று காரமுடையதாக இருந்ததால் இது மிளகாய் என அழைக்கப்பட்டது. உடலுக்கு மிளகாயை விட மிளகே சிறந்து. ஆயினும் மிளகாய் உடலில் ஏற்படும் சில தொந்தரவுகளுக்கு மருந்தாகவும் உள்ளது. அவற்றை தெரிந்துக் கொள்ளலாம்.
காயம் ஆற
மிளகாய், கல் உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து, வேப்பெண்ணையில் வதக்கிக் கட்ட காயம் விரைவில் ஆறும்.
தலைவலி தீர
மிளகாய், மிளகு மற்றும் செம்மண்ணை சம அளவு எடுத்து இந்த மூன்றையும் தண்ணீர் விட்டு மை போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ்சூடாகப் பற்றுப் போட தலைவலி விரைவில் பறந்தோடும்.
முள் தைத்த வலி நீங்க
மிளகாய் மற்றும் கல் உப்பை சம அளவு எடுத்து நல்லெண்ணையில் சேர்த்து நன்றாக வதக்கிக் பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுக்க முள் தைத்த வலி தீரும்.
வயிற்று வலி தீர
உஷ்ணத்தினால் வயிறு வலித்தால் அதற்கு மிளகாய் சிறந்த நிவாரணத்தை அளிக்கும். ஒரு மிளகாயைக் கிள்ளி அதன் விதைகளை வாயில் போட்டுக் கொண்டு, கொஞ்சம் தண்ணீர் குடிக்க உஷ்ண வயிற்று வலி தீரும். ஒரு மிளகாயின் விதையை மட்டுமே எடுக்க வேண்டும், அளவு கூடினால் வயிற்று எரிச்சல் ஏற்படும்.