ராஜமுடி அரிசி

முடிசூடிய ராஜாக்கள் உண்ட பாரம்பரிய அரிசிகளில் ஒன்று தான் இந்த ராஜமுடி அரிசி. பொதுவாக வெளிச்சந்தையில் வராத அரிசி என்று கூட இதனை சொல்லலாம். மைசூர் பகுதியை மையமாக கொண்ட அரிசி இந்த சன்ன ரக சிகப்பரிசி ராஜமுடி.

மைசூர் அரச பரம்பரையை சேர்ந்தவர்கள் முடிசூடிய மன்னர்கள் விரும்பி உண்ட அரிசி இந்த ராஜமுடி. அதனாலேயே இதற்கு ராஜமுடி என்ற பெயரும் வந்தது.

பொதுவாக சிகப்பரிசி என்றதும் சாதாரணமாக மோட்ட ரக அரிசிகளையே பெரும்பாலும் பார்த்திருப்போம். ஆனால் இந்த ராஜமுடி அவற்றிலிருந்து சற்று வித்தியாசமானது. சிகப்பரிசி ஆனால் சன்ன ரக அரிசி. பார்க்க சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். அன்றாட உணவிற்கும் ஏற்ற ஒரு சிறந்த அரிசி. நார் சத்துக்கள் நிறைந்த இந்த அரிசி ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகளையும் அதிகம் கொண்டுள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஜிங்க் சத்துக்களும் நோயை நீக்கும் பல சத்துக்களும் உள்ளது. இருதயத்தை பாதுகாக்கும் இந்த அரிசி, எலும்புகளுக்கு பலத்தை அளித்து உடலுக்கு புத்துணர்வையும் அளிக்கும் அரிசி.

குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட இந்த ராஜமுடி அரிசி நல்ல வாசனையையும், சுவையையும் சேர்த்தே அபரிவிதமாக அளிக்கிறது. மைசூர் மன்னர்கள் உண்ட அரிசி என்றால் சும்மாவா… இந்த சிகப்பரிசி சமைப்பதற்கும் மற்ற சிகப்பரிசிகளை விட மிகவும் சுலபம்.

இட்லி, தோசை, இடியாப்பம் என பலகரங்களுக்கும், சாதமாகவும் செய்து உட்கொள்ள சிறந்த அரிசி இந்த ராஜமுடி பாரம்பரிய அரிசி.

ராஜமுடியரிசியை சமைக்கும் முறை

ஒரு மணி நேரம் ராஜமுடி அரிசியை நீரில் ஊறவைத்து பின் ஒரு மண் சட்டியில் இருபது நிமிடம் முதல் முப்பது நிமிடங்கள் வேகவைத்தால் ராஜமுடி அரிசி சோறு தயார். அன்றாட உணவாக உட்கொள்ள சிறந்து. சாம்பார், ரசம், தயிர் என சேர்த்து உட்கொள்ளலாம்.

(1 vote)