கேழ்வரகு சிமிலி

குழந்தைகளின் வளர்ச்சியை நோக்கி அதிகரிக்கும் உணவுகளின் மத்தியில் கேழ்வரகு சிறந்த இடத்தை பிடிக்கிறது. சைவ உணவுகளில் கேழ்வரகில் தான் அதிகபடியான கால்சியம் (சுண்ணாம்பு) உள்ளது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை விரைவில் குணமாக்க வல்லது.

மேலும் கேழ்வரகைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – கேழ்வரகு சத்துக்களும் பயன்களும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் கேழ்வரகு மாவு
  • ½ கப் வறுத்த வேர்க்கடலை
  • 100 கிராம் வெல்லம்
  • நெய்
  • உப்பு

செய்முறை

கேழ்வரகு மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, அடை மாவு பதத்திற்குப் பிசைந்து வைக்கவும்.

பிசைந்த மாவை அடைகளாகத் தட்டி, வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

வேக வைத்தெடுத்த அடைகளை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும். 

வறுத்த வேர்க்கடலையைக் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். 

வெல்லத்தைக் கட்டியில்லாமல் கத்தியால் சீவி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

அத்துடன் நெய் சேர்த்து நன்கு கலந்து உருண்டையாகப் பிடித்துப் பரிமாறவும். 

சுவையான, சத்தான, எளிமையான சிமிலி தயார்.

கேழ்வரகு சிமிலி

தாய்க்கு நிகரான உணவு கேழ்வரகு
குழந்தைகளின் வளர்ச்சியை நோக்கி அதிகரிக்கும் உணவுகளின் மத்தியில் கேழ்வரகு சிறந்த இடத்தை பிடிக்கிறது. சைவ உணவுகளில் கேழ்வரகில் தான் அதிகபடியான கால்சியம்(சுண்ணாம்பு) உள்ளது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை விரைவில் குணமாக்க வல்லது.
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 40 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் கேழ்வரகு மாவு
  • ½ கப் வறுத்த வேர்க்கடலை
  • 100 கிராம் வெல்லம்
  • நெய்
  • உப்பு

செய்முறை

  • கேழ்வரகு மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, அடை மாவு பதத்திற்குப் பிசைந்து வைக்கவும்.
  • பிசைந்த மாவை அடைகளாகத் தட்டி, வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • வேக வைத்தெடுத்த அடைகளை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும். 
  • வறுத்த வேர்க்கடலையைக் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். 
  • வெல்லத்தைக் கட்டியில்லாமல் கத்தியால் சீவி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
  • அத்துடன் நெய் சேர்த்து நன்கு கலந்து உருண்டையாகப் பிடித்துப் பரிமாறவும். 
  • சுவையான, சத்தான, எளிமையான சிமிலி தயார்.