கேழ்வரகில் தான் அதிகபடியான கால்சியம் (சுண்ணாம்பு) உள்ளது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை விரைவில் குணமாக்க வல்லது.
மேலும் கேழ்வரகைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – கேழ்வரகு சத்துக்களும் பயன்களும்.
உடலுக்கு ஊட்டமளிக்கக் கூடியது. உடல் பருமன், நீரிழிவு, மூட்டுவலி உட்பட பல தொந்தரவுகளுக்கு சிறந்த காலை உணவு.
சாதாரணமாக கோதுமையில் மட்டும் செய்யும் பூரியை வித்யாசமாக கேழ்வரகு சேர்த்து செய்ய வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும், இரும்பு சத்துக்களும் எளிதில் கிடைக்கும். சுவையும் பிரமாதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- ½ கப் கேழ்வரகு மாவு
- ½ கப் கோதுமை மாவு
- உப்பு
- செக்கு கடலை எண்ணெய்
செய்முறை
கேழ்வரகு மாவு, கோதுமை மாவு சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்.
பின் அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி கட்டையில் தேய்த்து கடலை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூடான சுவையான ராகி பூரி தயார்.
கேழ்வரகு பூரி
தேவையான பொருட்கள்
- ½ கப் கேழ்வரகு மாவு
- ½ கப் கோதுமை மாவு
- உப்பு
- செக்கு கடலை எண்ணெய்
செய்முறை
- கேழ்வரகு மாவு, கோதுமை மாவு சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்.
- பின் அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி கட்டையில் தேய்த்து கடலை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- சூடான சுவையான ராகி பூரி தயார்.