ragi-mixture-fingermillet-snacks-recipe

ராகி மிக்சர் / Kelvaragu Mixture

புரதம், நார்ச்சத்துக்கள் மட்டுமில்லாமல் வைட்டமின் சத்துக்களும், தாதுச் சத்துக்களும் நிறைந்த தானியங்கள் நம் சிறுதானியங்கள். சாதாரணமாக வெள்ளை அரிசி, கடலை மாவில் மாவில் தயாரிக்கும் மிக்சரை விட பலபல மடங்கு சத்துக்கள் நிறைந்த மிக்சர் இந்த கேழ்வரகு மிக்சர்.

வளரும் குழந்தைகளுக்கு பிடித்தமான எளிமையாக தயாரிக்கக்கூடிய சுவையான மிக்சர். சுண்ணாம்பு, இரும்பு சத்துக்கள் நிறைந்தது.

சிறுதானியங்களின் பயன்கள், சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – சிறுதானியங்கள்.

கேழ்வரகின் பயன்கள், சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – கேழ்வரகு.

தேவையான பொருட்கள்

  • ½ கப் ராகி மாவு
  • 2 ஸ்பூன் சிறுசோளம் மாவு 
  • ½ ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • கருவேப்பிலை
  • ½ ஸ்பூன் ஓமம்
  • உப்பு
  • செக்கு நல்ல எண்ணெய்

செய்முறை

முதலில் ஓமத்தை நன்கு சிவக்க வறுத்து அதனை பொடியாக்கி பின் 1/4 கப் தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறவைக்கவும்

ராகி மாவு, சிறுசோளம் மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சிறிது செக்கு நல்லஎண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி அதனுடன் இந்த தண்ணீரை சேர்த்து கெட்டியாக நன்கு பிசையவும்.

இந்த மாவினை இடியாப்ப கட்டையில் பிழிந்து செக்கு நல்லஎண்ணையில் நன்கு பொரிக்கவும். நன்கு பொறித்த ராகி மிச்சரை சற்று உடைத்துவிடவும். கடைசியாக சிறிது கருவேப்பிலையை நன்கு வறுத்து இந்த ராகி மிச்சருடன் சேர்க்கவும்.

சுண்ணாம்பு சத்து நிறைந்த ராகியை இவ்வாறு சுவையான தின்பண்டங்களை செய்து கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பார்கள். 

ragi-mixture-fingermillet-snacks-recipe

ராகி மிக்சர்

வளரும் குழந்தைகளுக்கு பிடித்தமான எளிமையாக தயாரிக்கக்கூடிய சுவையான மிக்சர். சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்தது.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 20 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • ½ கப் ராகி மாவு
  • 2 ஸ்பூன் சிறுசோளம் மாவு 
  • ½ ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • கருவேப்பிலை
  • ½ ஸ்பூன் ஓமம்
  • உப்பு
  • செக்கு நல்ல எண்ணெய்

செய்முறை

  • முதலில் ஓமத்தை நன்கு சிவக்க வறுத்து அதனை பொடியாக்கி பின் 1/4 கப் தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறவைக்கவும்
  • ராகி மாவு, சிறுசோளம் மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சிறிது செக்கு நல்லஎண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி அதனுடன் இந்த தண்ணீரை சேர்த்து கெட்டியாக நன்கு பிசையவும்.
  • இந்த மாவினை இடியாப்ப கட்டையில் பிழிந்து செக்கு நல்லஎண்ணையில் நன்கு பொரிக்கவும். நன்கு பொறித்த ராகி மிச்சரை சற்று உடைத்துவிடவும். கடைசியாக சிறிது கருவேப்பிலையை நன்கு வறுத்து இந்த ராகி மிச்சருடன் சேர்க்கவும்.
  • சுண்ணாம்பு சத்து நிறைந்த ராகியை இவ்வாறு சுவையான தின்பண்டங்களை செய்து கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.