சாதாரணமாக கோதுமையில் மட்டும் செய்யும் சப்பாத்தியை வித்தியாசமாக கேழ்வரகு, வெந்தயக்கீரை சேர்த்து கேழ்வரகு வெந்தயக்கீரை சப்பாத்தி செய்து வளரும் குழந்தைகளுக்கு அளிக்க தேவையான சுண்ணாம்பு சத்துக்களும், இரும்பு சத்துக்களும் எளிதில் கிடைக்கும். சுவையும் பிரமாதமாக இருக்கும். உடல் பலத்தை அதிகரிக்கும் சிறந்த உணவு. மேலும் கேழ்வரகின் பயன்களையும் நன்மைகளையும் தெரிந்துக்கொண்டு அன்றாடம் அவ்வப்பொழுது பயன்படுத்துவது சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும். For English Ragi Methi Roti.
தேவையான பொருட்கள்
- ½ கப் கேழ்வரகு மாவு
- ½ கப் கோதுமை மாவு
- ½ கப் வெந்தயக்கீரை
- உப்பு
- செக்கு கடலை எண்ணெய்
செய்முறை
கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெந்தயக்கீரை சிறிது உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்.
பின் அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் தேய்த்து இரும்புக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் கடலை எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான சத்தான வெந்தயக் கீரை கேழ்வரகு சப்பாத்தி தயார். அனைவருக்கும் ஏற்றது. குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
கேழ்வரகு சப்பாத்தி
தேவையான பொருட்கள்
- ½ கப் கேழ்வரகு மாவு
- ½ கப் கோதுமை மாவு
- ½ கப் வெந்தயக்கீரை
- உப்பு
- செக்கு கடலை எண்ணெய்
செய்முறை
- கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெந்தயக்கீரை சிறிது உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் சேர்த்து பிசைந்து 30நிமிடம் வைக்கவும்.
- பின் அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் தேய்த்து இரும்புக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் கடலை எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
- சுவையான சத்தான வெந்தயக் கீரை கேழ்வரகு சப்பாத்தி தயார். அனைவருக்கும் ஏற்றது. குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.